ஸ்ரீவை தொகுதியில், ஊர்வசி அமிர்தராஜுக்கு சீட் இல்லை.,? காரணம் என்ன.!

ஸ்ரீவை தொகுதியில், ஊர்வசி அமிர்தராஜுக்கு சீட் இல்லை.,? காரணம் என்ன.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஊர்வசி அமிர்தராஜ்-க்கு சீட் வழங்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றார்கள்.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருப்பவர் ஊர்வசி அமிர்தராஜ். சில நாட்களாகவே இவருக்கு எதிராக கட்சிக்குள் பல்வேறு எதிர்ப்பு குரல்கள் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், இதனை கண்டும் காணாத வகையில் நடந்து கொண்டார் ஊர்வசி அமிர்தராஜ்....,  தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் குடுமி பிடி சண்டை வீதிக்கு வந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் மேலிட கூடுதல் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தமிழகத்திலுள்ள 17 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு சென்று அங்கு கள நிலவரங்களை தெரிந்து வருகிறார். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் கடந்த (07.01.2026) பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்றுள்ளது. அப்போது, ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் இருந்துள்ளனர். 

அப்போது, கூட்டத்தில், ஊா்வசி அமிா்தராஜ்-க்கு எதிராக பூகம்பமானது வெடித்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஊர்வசி அமிர்தராஜ்-க்கு சீட் கொடுக்க கூடாது என்ற போர்க்கொடி தான்.. 

காங்கிஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் சுடலையாண்டி, சிவ சுப்பிரமணியன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. அப்போது ஊர்வசி அமிர்தராஜ் ஆதரவாளர்களும் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கோபமான எதிரணியினர் மேடையிலேயே ஏறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாறி, மாறி இரு அணிகளும் மோதிக் கொண்டதால் (வாய் சண்டை) நிலைமை மோசமாகியுள்ளது..

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு அணிகளையும் சமாதானப்படுத்தியும் சண்டை ஓய்ந்த பாடில்லையாம்.. தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட கூடுதல் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா இறங்கி வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தனியாக உங்களை சந்திக்கிறேன். பொறுமையாக  இருங்கள் என்று கூறவே அமைதி நிலவி இருக்கிறதாம். பின்னர் கூட்டம் முடிந்த பின்பு பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா எதிர் அணியினரை சந்தித்து பேச அப்போது ஊர்வசி அமிர்தராஜ்க்கு எதிராக பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கின்றார்கள்.

அதாவது, ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தொகுதியில் இருப்பதே கிடையாது. முழுக்க சென்னை தான். இவர் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவதாகச் சொன்னார். வரவில்லை. வீணாக கடலுக்கு செல்லும் நீரை தடுப்பணை கட்டி தடுப்போம் என்றார், செய்யவில்லை. இது போன்ற பல பிரச்னைகள் தொகுதியில் இருக்கிறது. மக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றார்கள். ஆகவே 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி ஊர்வசி அமிர்தராஜ்-க்கு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் நிறுத்தினால் அவரது தோல்வி உறுதி. ஆகவே வேட்பாளரை மாற்றுங்கள் என்று "கறாராக" கூறி இருக்கிறார்கள் அந்த எதிர் தரப்பினர்..

பின்னர், நிவேதித் ஆல்வா நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லி கொண்டு ஒரு கும்பிடு போட்டு விட்டு புறப்பட்டு சென்று இருக்கின்றார்..

அதுமட்டுமா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தற்போது முன்னாள் எம்எல்ஏக்கள் சுடலையாண்டி, ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வழக்குரைஞா் மகேந்திரன், பெலிக்ஸ், விவசாய சங்க தலைவர் லூர்து மணி, செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், நடராஜன் உட்பட 18 பேர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆகவே ஊர்வசி அமிர்தராஜ்-க்கு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு குறைவு தான் என்கின்றனர் கதர் வேட்டி காரர்கள்..

செய்தியாளர் மு. மணிகண்டன்