தெற்கு ரயில்வே புதிய பரிந்துரை… தூத்துக்குடிக்கு வந்தே பாரத்!

தெற்கு ரயில்வே புதிய பரிந்துரை… தூத்துக்குடிக்கு வந்தே பாரத்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நாட்டிலேயே பயணியர் பிரிவில் அதிக வருவாய் ஈட்டும் மண்டலமாக தெற்கு ரயில்வே உள்ளது. ஆண்டுதோறும் வருவாய் 9 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க கவனம் செலுத்தி வருகிறோம்.

சென்னை சென்ட்ரல்–மைசூரு, சென்னை–கோவை, எழும்பூர்–திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

எழும்பூர்–ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க சில மாதங்களுக்கு முன்பு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து சென்னை–ராமேஸ்வரம் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்த தயாராக உள்ளோம். இந்த சேவை விரைவில் தொடங்கப்படும்..

மேலும், சென்னை–தூத்துக்குடி, தஞ்சாவூர்–மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் மு.மணிகண்டன்