90 வருட காலம் பாழடைந்த பழமையான வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்காததன் காரணம் என்ன?

90 வருட காலம் பாழடைந்த பழமையான வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்காததன் காரணம் என்ன?

90 வருட காலம் பாழடைந்த பழமையான வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்காததன் காரணம் என்ன?

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 25-வது வார்டுக்குட்பட்ட (மட்டக்கடை) கோபால் சாமி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. பழமையான "நகராட்சி சந்தை என அழைக்கப்பட்டு வந்த இந்த வணிக வளாகத்தில் உட்புறம் 10க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிப்புறம் 10க்கும் மேற்பட்ட கடைகள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பயன்பாடற்ற நிலையில் பூட்டியே கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

அதாவது, இந்த வணிக வாளாகத்தின் வெளிப்புறம் மளிகை கடை, காய்கறி கடை, ஜவுளிக்கடை, தேநீர் கடை, நைட் கிளப், போன்ற 10க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது இயங்கி வருகிறது. ஆனால், உட்புறமுள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளை தனிப்பட்ட ஒரு நபர் டெண்டர் எடுத்து முழுவதும் அவரின் கட்டுபாட்டில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது..

தூத்துக்குடி மாநகரில் பழமை வாய்ந்த வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. ஆனால் பழமையான இந்த வணிக வளாகத்தை, சேதமடைந்து பூட்டிய நிலையில் உள்ள இந்த வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் மறந்தது ஏனோ., இந்த வணிக வளாகத்தை புதுப்பித்தால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நன்கு பயன் பெருவார்கள்.. அதுமட்டுமா, அப்பகுதியை சுற்றி இருக்கும் மக்கள் தூரமாக இருக்கின்ற சந்தன மாரியம்மன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்த இடத்தில் ரேஷன் கடை அமைத்து கொடுத்தால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை புதுப்பிக்க வேண்டி பல அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்?

முன்னாள் மாநகராட்சி ஆணையாளராக இருந்த மதுபாலன் நேரில் ஆய்வு செய்து, புதுப்பிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது.. ஆனால், அவரால் அதனை செயல்படுத்த முடியவில்லை.. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தது தான் மிச்சம். அதுமட்டுமா, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் முடிவடைந்து, பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கு முன்னாள் டெண்டர் எடுத்தவர்களுக்கே மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏன் வணிக வளாகத்தை புதுப்பிக்க மனமில்லை..

ஆகவே, இந்த விவகாரத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர் தலையிட்டு பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாளர் : மு.மணிகண்டன்