ஒன்றிய அரசு துறைகளில் 275 இடங்கள்

275 seats in Union Government departments

ஒன்றிய அரசு துறைகளில் 275 இடங்கள்

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 275 பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

அ.எம்ப்ளாயிஸ் புராவிடண்ட் பண்ட் அலுவலகம்.

1. எம்ப்ளாயிஸ் புராவிடண்ட் பண்ட் அலுவலகத்தில் என்போர்ட்ஸ்மென்ட் ஆபீசர்/அக்கவுன்ட்ஸ் ஆபீசர்: 156 இடங்கள் ( பொது-78, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-42, எஸ்சி-23, எஸ்டி-12). இவர்களில் 9 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: பொதுப் பிரிவினருக்கு 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

2. எம்ப்ளாயிஸ் புராவிடண்ட் பண்ட் அலுவலகத்தில் அசிஸ்டென்ட் புராவிடண்ட் பண்ட் கமிஷனர்: 74 இடங்கள் (பொது-32, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-28, எஸ்சி-7). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: பொதுப் பிரிவினருக்கு 35க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.25/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.யுபிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேரந்தெடுக்கப்படுவர்.

https://upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆ.வருமான வரி அலுவலகம்.

1. அசிஸ்டென்ட் டைரக்டர் (சிஸ்டம்ஸ்): 45 இடங்கள். (பொது-20, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-12, எஸ்சி-6, எஸ்டி-3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: பொதுப்பிரிவினருக்கு 35க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி, கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://upsconline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.