காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கேள்விக்கு வைகோ பதில்.!

காங்கிரஸ் ஆட்சிப் பங்கு கேள்விக்கு வைகோ பதில்.!

தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எடுபடாது, ஏற்கப்படாது என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறும் போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழக அரசியலில் நுழைய முயல்கிறது. அவற்றை “வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்” என்பதற்காகவே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் இடங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்பது அவரவர் உரிமை என்றாலும், மதிமுக கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.

“மதிமுக சேர்ந்து விடவில்லை, அது முடங்காது. அடிப்பட்ட வேங்கை சீறி எழுவது போல நிமிர்ந்து எழுந்து வீரநடை போடும். மதிமுக, திமுகவுக்கு ஈட்டி முனையாக, உறுதுணையாக, பக்க அரணாகவும் செயல்படும்..

காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது, என்றார். 

மேலும், வந்தே மாதரம் பாடல் சட்ட மசோதா அரங்கேற்றப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு?  பிரிட்டிஷ்காரர்களின் லத்தியும் துப்பாக்கியும் தான் இந்தியாவை ஒருமைப்பாட்டில் கொண்டு வந்ததாக குறிப்பிட்ட வைகோ, இப்போது அந்த ஒருமைப்பாட்டை உடைக்கக்கூடிய ஆபத்துகளை உருவாக்கும் முயற்சியாக வந்தே மாதரம் பாடல் சட்ட மசோதா அரங்கேற்றப்பட்டுள்ளது என்றார்..

செய்தியாளர் :மு.மணிகண்டன்