வைகோ இருக்கும் வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பில்லை-துரை வைகோ தூத்துக்குடியில் பேட்டி.!

வைகோ இருக்கும் வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பில்லை-துரை வைகோ தூத்துக்குடியில் பேட்டி.!

விஜய்-க்கு 15 சதவீதம் விழுக்காடு வாக்குகள் வரும்.. ஆனால் வெற்றியாக மாறாது.., விஜய் வருவதால் திமுக வெற்றி எளிது-மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தூத்துக்குடியில் பேட்டி.!

கம்போடியா நாட்டிற்கு தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் பணிக்கு சென்ற போது கடத்தப்பட்டு மியான்மர் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ இந்திய தூதரகத்திடம் பேசி விடுவிக்க முயற்சி செய்தார். இதில், இருவர் தூத்துக்குடி, கீதாஜீவன் நகரை சேர்ந்த நவீன் குமார், சித்திரை செல்வகுமார் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் கடந்த 7ந் தேதி டெல்லி வந்து 12ந் தேதி தூத்துக்குடி வந்தனர்..

இந்த நிலையில், தூத்துக்குடி கீதா ஜீவன் நகரில் உள்ள இருவரையும் அவர்களது வீட்டில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சந்தித்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்..

இதனைத்தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்துக் கூறும் போது, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி-யிடம் எடுத்துக்  கூறுவேன். உப்பளத் தொழிலாளர்கள் மிகவும் அடித்தட்டு மக்கள். வாழ்வாதாரம் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கக் கூடாது. கனிமொழி எம்பி இதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது..

திமுக-தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு? மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்தது வரவேற்கத்தக்கது. சமூக நீதி அரசியலா- சமூகத்திற்கு எதிரான அரசியலா? ஜனநாயக சக்தியா- சர்வாதிகார சக்தியா? இந்த இரண்டுக்கும் இடையிலான போட்டி. திமுக வலுவான கூட்டணி. உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்த கூடியதால் இந்த வெற்றி. கடந்த நான்கு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 75 விழுக்காடு 800 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. 35 விழுக்காடு செயல்பாட்டிற்கு வந்து திறக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறியிருந்தார்கள். மத்திய அரசு தரவு மூலமாகவே கடந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 29 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. 

தமிழகத்திற்கு பிரதமர் வருகை தொடர்ச்சியாக உள்ளது குறித்த கேள்விக்கு? தேர்தல் காலங்களில் பிரதமர் அதிகமாக வர தான் செய்வார். தமிழகத்தில் பாஜக சார்பாக நான்கரை ஆண்டுகளில் எந்த முக்கிய திட்டம் அறிவித்தார்கள்? தமிழகத்தில் தர வேண்டிய நிதியை கொடுத்தார்களா? மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. ஆகவே தான் தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

மேலும், முன்னாள் நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து மத்திய-மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவம் குறித்து அறிக்கை கேட்டிருந்தார்கள். மாநிலம் இல்லாமல் மத்திய அரசு கிடையாது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா 11 வது பொருளாதார சக்தியாக இருந்தது. வரும் இருக்கும் காலங்களில் 3வது இடத்திற்கு வர உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தான்.. ஆகவே, தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மனதார பாராட்ட வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வர் மற்றும் எனது வேண்டுகோள். 

நடிகர் விஜய் குறித்து பேசும் போது? நடிகர் விஜய் மிகப்பெரிய ஒரு நட்சத்திரம். தமிழ்நாட்டில் அவரை ரசிப்பதற்கு ஒரு இளைஞர்கள் கூட்டம் உள்ளது. பாஜகவை மதவாத சக்தி என்று அவர் எதிர்க்கிறார் ஆனால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி, திட்டத்திற்கு உண்டான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. SIR, சிறுபான்மையின தாக்குதல், போன்ற பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அந்த அநீதி பற்றி விஜய் பேச மறுக்கிறார். ஆகவே ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்தல் நேரத்தில் 15 விழுக்காடு வரைக்கும் விஜய்க்கு வாக்குகள் வரலாம். அது பெரிய விஷயம். ஆனால் அது வெற்றியாக மாறாது. செயல்பாடு, கொள்கை கூறி இருக்கின்றார். அவ்வாறு அவர் இருப்பாரா என்று காலம்தான் பதில் சொல்லும். 

விஜய் வருவதால் திமுக ஓட்டு சதவீதம் பாதிக்குமா என்ற கேள்விக்கு? திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெற்று இருக்கின்றோம். நாங்கள் மக்களை நம்பி இருக்கின்றோம். விஜய் 15 சதவீதம் விழுக்காடு வாங்கும்போது ஆட்சிக்கு எதிரான மனநிலை சில பேர் இருக்கலாம். அந்த வாக்குகள் பிளவுப்படும் போது திமுக வெற்றி எளிதாகும். 

மதிமுக கூட்டணியில் எத்தனை சீட் என்ற கேள்விக்கு? தலைமையும், தலைவர் வைகோவும் முடிவு எடுப்பார்கள். தேர்தல் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த இயக்கத்திற்கும் பேச்சு வார்த்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதன் பின்பு எத்தனை சீட், எந்தெந்த தொகுதியில் என்று அறிவிப்போம். ஒரு அங்கீகாரத்தை இயக்கம் பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 8 சட்டமன்றத்திலாவது வெற்றி பெற வேண்டும். ஆகவே புதிய கூட்டணிகள் வந்திருக்கிறார்கள்.. தமிழக முதல்வர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அன் கண்டிஷனல் சப்போர்ட் தான் கொடுத்து இருக்கின்றோம். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிப்போம். மிகப்பெரிய வெற்றி அடைவோம். 

ராஜ்யசபா எம்பி சீட் குறித்த கேள்விக்கு? தலைவரிடம் இது குறித்து நான் பேசவில்லை. முன்னணி தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள்..

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வைகோ போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கு? அது தலைவர் விருப்பம் போட்டியிட அவர் விரும்பினால் மூத்த தலைவரிடம் அவர் பேசுவார். இதுவரை அப்படிப்பட்ட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

பசுமை ஸ்டெர்லைட் ஆலை என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு? ஸ்டெர்லைட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காற்று நீர் மாசுபட்டது. ஆகவே, மக்கள் பிரச்சனையால் அந்த ஆலை மூடப்பட்டது. கிரீன் காப்பர் என்ற முறையில் திறக்க முற்படுகிறார்கள். அது நிறைவேறாது. மதிமுக இருக்கும் வரை, வைகோ இருக்கும் வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பே இல்லை என்றார்.