மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் 17.02.2026 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.!
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை 17.02.2026 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா, கேட்டுக்கொண்டுள்ளார்..
செய்தியாளர் மு.மணிகண்டன்