5000 உரிமைத்தொகை அரசின் தேர்தல் யுக்தி – தமிழ் பகுஜன் சமாஜ் கட்சி விமர்சனம்.!
தமிழக அரசின் தலையீட்டால் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.!
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் பொற்கொடி (ஆம்ஸ்ட்ராங் மனைவி) தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி, மாநில துணை பொதுச் செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். தமிழக அரசு இதனை கண்டு கொள்ளவில்லை.. ஆனால், தேர்தல் நேரத்தில் மற்றும் ஊக்கத்தொகை கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை, அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்து இதில் தலையீடு இருக்கின்றது. நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கின்றோம். வெளியே சென்ற குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
விஜய் சேலம் கூட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கிறார் ஆகவே அது பற்றி கூற விரும்பவில்லை. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மிக பலமான சக்தி வாய்ந்த கட்சியாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்றார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்