தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற போகுதா? அமைச்சர் கீதா ஜீவன் கொடுத்த ஸ்வீட் பதில்.!
தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்., பாலம் கட்ட முயற்சி எடுக்கப்படும்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்..
தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், அவசர தேவைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த போக்குவரத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தூத்துக்குடி மக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர் என்று முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது குறித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறும் போது, "ரயில்வே மேம்பாலம் பணிகள் குறித்து பொறியாளரிடம் பேசுகிறேன். சதர்ன் ரயில்வே ஜிஎம் உடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
1ம் கேட் மூடியே கிடப்பதால் 2ம் கேட் பகுதியில் மக்கள் மிகுந்த சிரமம் அனுபவிக்கிறார்கள். ”மேலும், பத்திரகாளியம்மன் கோவில் அருகே நடை மேம்பாலம், அதுபோல நான்காம் கேட், நிகிலேசன் நகர் பகுதியில் மேம்பாலம் வேண்டும். கட்டாயம் அவசர தேவை. இந்த கோரிக்கையை கனிமொழி எம்பியிடமும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும், “அடுத்த கட்ட முயற்சி எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கூறினார்.
பாலம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுமா? அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்படும் மற்றொரு வாக்குறுதியாகி விடுமா? தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்..
செய்தியாளர் மு.மணிகண்டன்