மீடியா உட்பட எல்லாத்தையும் தூண்டி விடுவது திமுக அரசாங்கம்-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!
மீடியா உட்பட எல்லாத்தையும் தூண்டி விடுவது திமுக அரசாங்கம். திமுக தூண்டுதலின் பெயரில் அனைத்து வேலைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் காரணம் முழுக்க, முழுக்க திமுக தான்-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் காரசார பேட்டி.!
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செல்கின்றார். இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார் இது குறித்த கேள்விக்கு? செங்கோட்டையன் டெல்லிக்கு போனால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். ராமர் கோவில், ரிஷிகேஷ் போவதாக கூறி இருக்கின்றார். உங்களுக்குத் தெரிந்த மாதிரி தான் எனக்கும் தெரியும். அவர் எங்கே போய் இருக்கின்றார் என்று எனக்கு தெரியாது.
கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது தான் பாஜக வேலை என செல்வப் பெருந்தகை கூறியிருக்கின்றார்? காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்யும் போது 90 தடவை மாநில ஆட்சியை கலைத்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சியின் வழக்கம் அது, எங்கள் கட்சி அது அல்ல. கூட்டணியை வளர்ப்பது தான் எங்கள் நோக்கம்.
முதல்வர் வெளிநாடு சுற்றுபயணம் குறித்த கேள்விக்கு? ஏற்கனவே நாட்டில் இருக்கும் கம்பெனிகளை தான் சேர்த்துக் கொண்டு வந்திருக்கின்றார். கடந்த முறை சுற்று பயணம் மேற்கொண்டார் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு இருந்தோம். ஆனால் சும்மா ஒரு பதிவை மட்டும் போட்டு கொண்டே இருக்கிறாரே தவிர பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை.
டிடிவி தினகரன், ஒபிஎஸ்-ற்கு பாஜக அழைப்பு விடுக்கப்படுமா? ஏற்கனவே தமிழக பாஜக கட்சி சார்பாக எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று பேசி இருக்கின்றேன். தேவைப்பட்டால், அழைத்தால் நானே பேச இருக்கின்றேன். தேவைப்பட்டால் கண்டிப்பாக நானே கூட அழைப்பேன்.
துப்புரவு பணியாளர்கள் கைது குறித்த கேள்விக்கு? தேர்தல் அறிக்கைகளில் தமிழகம் முழுவதுமுள்ள துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். அதை தான் துப்புரவு பணியாளர்கள் கேட்கின்றார்கள். தொடர்ந்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த இடத்தை மாற்றினார்கள்.. மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். இந்த அரசாங்கம் போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாங்கமாக இருக்கின்றது. பாஜக சிறுபான்மை அணியின் வேலூர் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளார்கள்.
தலைமை செயலகம், கவர்னர் மாளிகை-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிஜிபி பணி நியமனம் தற்போது வரை செய்யப்படவில்லையே? தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் மட்டுமல்ல எல்லா மிரட்டல்களும் நடக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்களும் நடக்கின்றது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் குறித்த கேள்விக்கு? குடியரசு துணை தலைவர் தேர்தல் நிச்சயமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர், மகாராஷ்டிரா கவர்னராக இருக்கக்கூடிய சி.பி. ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்.
திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக அண்ணாமலை கூறி இருக்கின்றார். இது குறித்தான செய்தி தினமலரில் வெளியாகியுள்ளது.. இது குறித்த கேள்விக்கு? அது பற்றி எனக்கு தெரியாது. நான் தினமலரை பார்க்கவில்லை.
செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்? செங்கோட்டையன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
தமிழக பாஜக சார்பில் செங்கோட்டையனை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்திருக்கின்றார். எங்களைப் பொறுத்த அளவிற்கு ஒன்று சேர வேண்டும் என்பதுதான். அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் போய் சந்திக்க முடியாது.
டெல்லி செல்கின்றீர்களா? டெல்லிக்கு 11ந் தேதி செல்கின்றேன்.
செங்கோட்டையனை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. செங்கோட்டையனை கேட்டு சொல்லுங்கள் அதன் பின்பு அவரை சந்திக்கலாம்.
செங்கோட்டையனை பாஜக தான் தூண்டிவிடுகிறது. அதிமுகவை உடைப்பதற்குண்டான வேலையை பாஜக செய்து வருகிறது என்ற திமுக கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு? மீடியா உட்பட எல்லாத்தையும் தூண்டி விடுவது திமுக அரசாங்கம். திமுக தூண்டுதலின் பெயரில் அனைத்து வேலைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் காரணம் முழுக்க, முழுக்க திமுக அரசாங்கம் தான்.
தமிழகத்தில் தான் முதலீடுகள் அதிகமாக வருவதாக திமுக அரசு கூறி வருகின்றனர்? பேப்பரில் சீனி என்று எழுதி விட்டு நக்கினால் இனிக்காது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.