பாஜக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியா? பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டியால் அதிர்ச்சி.!

பாஜக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியா? பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டியால் அதிர்ச்சி.!

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்..

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தன் மீது (அமைச்சர் கே.என் நேரு) கலங்கம் இருக்கின்றது என்று நீதிமன்றம் சொன்ன பின்பு அவர் வழக்கை எதிர் கொள்ள தயாராக இருந்திருக்க வேண்டும். அல்லது தமிழக முதல்வர் இந்த வழக்கு இருப்பது தெரிந்து அவரை தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விடுவித்து வழக்கை நடத்துவதற்கு எதுவான ஒரு நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் பொது வாழ்க்கையில் தூய்மை நேர்மை என்று சொல்ல அர்த்தமற்று போய்விடும்.

திமுக 1967 இல் ஆட்சிக்கு வந்த முதல் களங்கம் இல்லாத ஒரு அரசாங்கத்தை தந்ததே கிடையாது. அது இந்த ஆட்சியில் நிரூபித்து நீதிமன்றம் கூறியிருக்கின்றது. அது நிரூபிக்கப்படும் என்று நானும் நம்புகின்றேன். 

செக்யூரிஸம் என்று சொன்னால் வாய் திறந்து பேசவே முடியாது. நாடு முழுக்க இருக்கக்கூடிய ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் படங்கள் அகற்றப்பட வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற சொல்லக்கூடிய வார்த்தைகள் இழிவான வார்த்தைகள் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

பங்கிம் சந்திர சேட்டர் ஜீயின் வந்தே மாதரம் இழிவானது என்று பறைசாற்ற கூடிய சூழ்நிலை வர வேண்டும். ஆழமாக பார்த்தால் தேசிய கீதம் உட்பட எதுவும் பாட முடியாது. தேசிய அடையாளம் தமிழகத்தில் நுழையக்கூடாது என்ற மன நிலையில் வைகோ உள்ளார். எத்தனை வருடங்களாக பாராளுமன்றத்தில் அவர் இருந்தார். அப்போது ஏன் பேசவில்லை. பாஜக கூட்டணியில் பல தடவை இருந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் ஏன் பேசவில்லை. சேர்ந்த இடம் சரியில்லை என்று சொன்னால் சேர்ந்தவர்களும் கெட்டுப் போவார்கள் என்று கன்று போன்ற உதாரணத்திற்கு சில வார்த்தைகள் சொல்வார்கள் அதை நான் சொல்ல விரும்பவில்லை.

எஸ்சி, எஸ்டி நிதியில் இருந்து 5000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருப்பதை அதிமுக, பாஜகவினர் bஎடுத்துக் கூறியிருக்கின்றோம். ஆனால் இதற்கான பதிலை தமிழக அரசு சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை. திருமா கேள்வி எழுப்ப வேண்டும். போராட வேண்டும். எந்த நோக்கத்திற்கு செயல்பட வேண்டுமோ அந்த நோக்கத்திற்கு திருப்பிக் கொடுத்தாக வேண்டும். 

ஓபிஎஸ் முதிர்ந்த, பண்பட்ட ஒரு தலைவர். தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் அவர் தவறு செய்யக்கூடாது தவறு செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். 

தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் போட்டியிட இருக்கின்றீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் என்றார்..

செய்தியாளர் மு.மணிகண்டன்