பொதுமக்கள் கோரிக்கைக்கு பதில்: பண்டுகரை சாலை சீரமைப்பு விரைவில்.!
தூத்துக்குடி, பண்டுகரை சாலை தரமற்ற நிலையில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது குறித்து செய்தி வெளியிட்ட நிலையில், சாலை சீரமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்துள்ளார்.!
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள், 3ம் மைல் பக்கிள் ஓடை பாலம் முதல் திரேஸ்புரம் பக்கிள் ஓடை வரை பல கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பொதுவாக பண்டுகரை சாலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாற்று சாலை, நகரின் பிரதானமான தமிழ்சாலை மற்றும் வஉசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகவும், தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் நடைபெற்றது..
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: “பண்டுகரை சாலையின் சேதமடைந்த நிலை குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பும், சீரான போக்குவரத்தும் மாநகராட்சியின் முதன்மை பொறுப்பு. எனவே உடனடி ஆய்வு மேற்கொண்டு சாலை சீரமைக்கப்படும் என்றார்..
செய்தியாளர் மு.மணிகண்டன்