தூத்துக்குடியில் மீண்டும் புயலை கிளப்பும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்.!

தூத்துக்குடியில் மீண்டும் புயலை கிளப்பும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்.!

ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலில் பிரச்சாரம்- தூத்துக்குடியில் மீண்டும் புயலை கிளப்பும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்.!

தூத்துக்குடியில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை பசுமை காப்பர் என்ற பெயரில் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப்பில் வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறும் போது, தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தையும் மாசுபாடாக்கி பொது மக்களின் தன் எழுச்சியான போராட்டம் காரணமாக 11 உயிர்கள் பலியாகினர். பின்னர், உச்ச நீதிமன்றம் மூலம் ஸ்டெர்லைட்ஆலை மூடப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை காப்பர் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் நுழைவதை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருபோதும் அனுமதிக்காது.. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும். 

ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைய அனுமதி அளிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது தூத்துக்குடியில் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை. வியாபாரிகள், மீனவர்கள் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்..

திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலை முற்றிலுமாக அகற்றப்படும், துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வாங்கி தரப்படும் என்றார்கள். 

மேலும், அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறியுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்திலும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 11 தியாகிகள் நினைவாக நினைவு மண்டபம் அமைக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரடியாக, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர்.

செய்தியாளர் மு.மணிகண்டன்