தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக மெத்தனபோக்கு, குறைதீர்க்கும் முகாம் மனுக்களுக்கு தீர்வு எப்போது?
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மெத்தனபோக்கு.., குறைதீர்க்கும் முகாம் மனுக்களுக்கு தீர்வு எப்போது?
தூத்துக்குடி மாவட்டம், வான்வழி, கடல்வழி, ரயில்வழி, சாலைவழி என நான்குவழித் தடங்களிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அதுமட்டுமா, மீன்பிடி தொழில், ஜவுளி மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழில்கள் என தொழிற் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் செம்மைமிகு பாதையைக் கண்டு வருகிறது நம் தூத்துக்குடி மாவட்டம். சுற்றுலா, சிறு தொழில்கள், விவசாயம், பாரம்பரிய கலாச்சாரம், தொன்மை மிக்க அகல்வாராய்ச்சி என மாவட்டத்தின் பெருமைகள் நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலமாக இருப்பது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 10 தாலுகாக்கள், 12 வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள், 480 வருவாய் கிராமங்கள் உள்ள நிர்வாக அலுவலக பணிகளின் மூலமாக மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகள், அரசின் நலத்திட்டங்களும் சென்றடைகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளுக்கும், அரசின் நலப்பணித்திட்ட உதவிகளுக்கும், அடிப்படை வசதிகளுக்கும், சுற்றுச்சூழல் நலன்களுக்கும் அன்றாடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிக்க வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர் கூட்டம், மாதந்திர விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், நுகர்வோர்கள், ஓய்வூதியதாரர்கள், படைவீரர்கள் என பலவேறுபட்ட மக்கள் குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இதுபோக கோட்ட அலுவலகம் மற்றும் மாநகராட்சி சார்பிலும் மக்களிடமிருந்து குறைதீர் மனுகள் பெறப்படுகின்றன. இவ்வாறு பல நிர்வாகத்தினர் மற்றும் வகைப்பட்ட முறையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்கும் மக்களின் கூட்ட எண்ணிக்கைகள் குறைந்தபாடில்லை.
மக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து கொள்வது மட்டுமன்றி மத்திய, மாநில அரசுகளின் பல்வேறுபட்ட நலத்திட்டங்களை முறையாக கண்டறிந்து மக்களிடையே கொண்டு செல்வதே ஒவ்வொரு அரசு பணியாளர்களின் சேவைப்பணியாகும். இத்தகைய பணிகளின் தலைமையாக இருந்து மாவட்டம் முழுமைக்கும் தலைமை பணியாளராக இருப்பவர் மாவட்ட ஆட்சியர்., இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் வசதி, இயற்கை சீற்ற பேரிழப்புகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசின் திட்டப் பணிகளுக்கான கோரிக்கை மனுக்கள், உதவிக் தொகை, மானியக் கடன்கள், வேலைவாய்ப்புகள், பத்திரிகையாளர்களின் வீட்டுமனை பட்டாக்கள் என சராசரியாக ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் நானூறு வீதம் ஆண்டு ஒன்றுக்கு 16,500 எண்ணிக்கையிலான மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் சுமார் ஐந்து சதவீத மனுக்கள் கூட நிறைவேற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
மனுக்கள், சட்டம் ஒழுங்குகள், விவசாயிகள், நுகர்வோர்கள், படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் என அடுக்கடுக்கான வகையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களின் பெருவெள்ளக் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன, கோரிக்கைகள் நிறைவேறுகிறதா, அல்லது அதிகாரிகளின் செயல்பாடுகள் குறைகிறதா,என்பது ஐயப்பாடாகவே உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சியரகத்திற்கு மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமுள்ள அலுவலகங்களின் மீது பார்வையை செலுத்தி அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
மேலும், கடந்த 4 ஆண்டு காலமாக நடைபெற்ற பணிகள் எது என்று கேட்டால் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறைவடைந்ததை தான் திமுக தான் செய்த சாதனையாக கூறி தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ என அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அந்த நிதியை முறையாக செய்திருந்தால் இப்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை மனுவோடு வரவேண்டிய அவசியமே இருக்காது. ஒதுக்கப்படும் நிதியை தனக்கு வேண்டியவர்களுக்கு பணியை கொடுத்து அதில் சுய விளம்பரங்களைத் தேடிக் கொண்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் ஒவ்வொரு வாரமும் பல பகுதிகளிலிருந்து ஆட்சியர் அலுவலக்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வருகின்றனர். முதலமைச்சரின் தங்கை கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால் அப்போது தமிழ்நாடு முழுவதும் இதை விட குறைபாடுகள் அதிகமாகத்தான் இருக்குமோ? தமிழக அரசு விரைவாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.