தூத்துக்குடி தொழிலதிபர் பாஜகவில் இணைந்தார்.!
தூத்துக்குடி: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர்.
பாளையங்கோட்டை முன்னாள் நகராட்சி தலைவர் மறைந்த மகாராஜா பிள்ளையின் பேரன் சுந்தர் மகாராஜன் மற்றும் தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவன அதிபரும், முன்னாள் ஓபிஎஸ் அணியின் செயற்குழு உறுப்பினருமான ரமேஷ் உள்ளிட்ட 15 பேர், நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த இணைவு தென் மாவட்டங்களில் கட்சியின் வலிமையை மேலும் அதிகரிக்கும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன..
செய்தியாளர் மு.மணிகண்டன்