டி20 உலகக் கோப்பை இறுதி: எல்இடி திரையில் பொதுமக்களுக்கு நேரலை – மேயர் ஜெகன் ஏற்பாடு.!
தூத்துக்குடி: டி-20 உலக கோப்பை இறுதி போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரை இறுதியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி தன்னுடைய பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் பொதுமக்கள் பெரிய திரையில் பார்த்து மகிழும் வகையில் முத்துநகர் கடற்கரை பூங்காவில் பெரிய அளவிலான எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை கண்டு களிக்கலாம் என்றும், இந்த வசதியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்