தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்து கடைகள் அடைப்பு – நோயாளிகள் அவதி.!
தூத்துக்குடி: அகில இந்திய மருந்தகங்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் மருந்தகங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
மருந்தகங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தேவையான மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அவசர தேவைக்காக மருந்து வாங்க வந்தவர்கள் பல இடங்களில் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை பார்க்க முடிகிறது.
அதேசமயம், அம்மா மருந்தகங்கள் மற்றும் சில தனியார் கார்ப்பரேட் மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டதால் அங்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.
மருந்தக உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கடையடைப்பு போராட்டம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்