ஓட்டப்பிடாரம் அருகே கணவன் இறந்த நிலையில், மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்த தூக்கிய அசால்ட் அதிகாரிகள்.,!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா-வின் அசால்ட் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அல்லல்பட்ட குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் குறித்த ஓர் செய்தி..
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி-பேச்சியம்மாள், இந்த தம்பதியினருக்கு மாரி பிரியா, ஜோதி மீனா ஆகிய இரண்டு பெண் உள்ளனர். இதில் மாரிப்பிரியா மாற்று திறனாளி பெண்...
இதில், இளைய மகள் ஜோதி மீனா திருமணம் ஆகி மாப்பிள்ளை வீட்டாருடன் சென்ற நிலையில், தந்தை கிருஷ்ணமூர்த்தி மனைவி பேச்சியம்மாள், மகள் மாரிப்பிரியா ஆகிய 3 பேரும் புதியம்புத்தூரில் வசித்து வந்துள்ளனர்.. இதில், தந்தை கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிட்னி பாதிப்பால் இறந்து விட தாய் பேச்சியம்மாளுடன் மாற்று திறனாளி பெண்ணான மாரி பிரியா வசித்து வருகிறார்.
மாற்று திறனாளி பெண் என்று தான் பெயர்.. ஆனால் அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் இந்த குடும்பத்தினர் அனுபவிக்கவில்லை.. கிருஷ்ணமூர்த்தி கூலி வேலைக்கு சென்றும், ரேஷன் பொருட்களை வைத்தும் தான் குடும்பத்தையே காப்பாற்றி வந்துள்ளார்.. ஆனால் கிருஷ்ணமூர்த்தி இறந்த பின் குடும்பமே நிற்கதி. இனி ரேஷன் கடையில் போடும் பொருட்களை வைத்து தான் வாழ வேண்டும் என்று முடிவெடுத்த இவர்கள் வாழ்க்கையில் ஓட்டப்பிடாரத்திலுள்ள அரசு அசால்ட் அதிகாரிகளால் வந்த வினை தான் வேதனையிலும், வேதனை.
ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்க்காக இந்த மாற்றத்திறனாளியின் பெண்ணின் தாய் பேச்சியம்மாள் சென்ற போது, கடைக்காரர்கள் பேச்சியம்மாளிடம் உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் பொருட்கள் தர இயலாது என்று கூற அதிர்ச்சி அடைந்தார் பேச்சியம்மாள்.. பின்னர், கடைக்காரரிடம் முறையிட்டிருக்கின்றார்..
அப்போது கடைக்காரர் தங்களுக்கு எதுவும் தெரியாது தாங்கள் ஓட்டப்பிடாரத்திலுள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் கேட்டு கொள்ளுங்கள் என்ற கூற பேச்சியம்மாள் மற்றும் இளைய மகள் ஜோதி மீனாவை அழைத்து கொண்டு வட்ட வழங்கல் அலுவலரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.. அப்போது அசால்ட் அதிகாரி, அசால்ட்டாக, உங்க கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார்.. ஆனால் அவர் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கு பதிலாக உங்கள் பெயரை நீக்கி விட்டோம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூற பதபதைத்து போனது அந்த குடும்பம்.
ரேஷன் பொருட்களை வைத்து தானே வாழ்ந்தோம். திடீரென பெயரை நீக்கி ரேஷன் பொருட்களை தர இயலாது என்றால் நாங்கள் என்ன செய்வது, எங்களுக்கு சொந்தம் பந்தம் என்று யாரும் இல்லை. இந்த ரேஷன் பொருட்கள் தான் எல்லாமே என கண்ணீர் மல்க முறையிட்டு இருக்கின்றார்.. ஆனால் அந்த அசால்ட் அதிகாரி 'நாங்க ஒன்னும் செய்ய முடியாது' உங்க பக்கத்து வீட்டுக்காரங்க தான் சொன்னாங்க அதனால்தான் நீக்கி விட்டோம். இத சென்னையில போய் தான் மீட்டு வரணும் என்றுள்ளார்.. ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்படும் நிலையில் சென்னை சென்று எப்படி மீட்பது என்று தெரியாமல் இந்த அசால்ட், சோம்பேறி அதிகாரிகளால் குடும்பமே நிற்கதியாக நின்றுள்ளது. ஒரு கட்டத்தில் உயிரை மாய்த்து கொள்ள முடிவெடுத்து விட்டனர் அந்த குடும்பத்தினர்...
பொதுவாக ரேஷன் கார்டில் இறந்தவர்கள் பெயரை நீக்கும் முன், அப்பகுதி தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்களை நேரடி விசாரணை செய்து அறிக்கை பெற்ற பின்னரே நீக்கப்பட வேண்டும்.. ஆனால் பக்கத்து வீட்டில் கேட்டோம் நீக்கி விட்டோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்...
இது குறித்து தகவல் அறிந்து ஓர் தனியார் செய்தி நிறுவனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட நிலையில், இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உடனடியாக ரேஷன் கார்டு, மாற்று திறனாளி பெண்ணுக்கு ஆதார் கார்டு எல்லாம் வழங்கியுள்ளார். அதுமட்டுமில்ல, மாதம் 2,000 பராமரிப்பு உதவி தொகை, புதியம்புத்தூர் பகுதியில் இடம் ஒதுக்கி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும் என வும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உறுதி அளித்திருக்கின்றார். மேலும், 50 ஆயிரம் பணமும் அந்த குடும்பத்திற்கு வழங்கியுள்ளார் ஆட்சியர்.. இதனால் பெருமூச்சி விட்ட அந்த குடும்பத்திற்கு மேலும், மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..
"கடவுள் இருக்கான் குமாரு" என்ற வசனத்தின் அடிப்படையில் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கத்தினர், அந்த குடும்பம் வசிக்கும் பகுதியை சேர்ந்த பாஜகவினர், தூத்துக்குடியில் விஜய் கட்சி என்று சொல்லி கொள்ளும் எந்த பொறுப்புமே வகிக்காத அஜிதா ஆக்னல், மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் மகள் உள்ளிட்டோர் அரிசி, காய்கறி, பருப்பு, டிவி மற்றும் பல்வேறு நிதி உதவிகளையும் செய்து இருக்கின்றார்கள்.
விஜய் கட்சியின் தமிழக வெற்றி கழகத்தின் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ள மதன் ராஜா என்பவர் தான் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு பொறுப்பு, ஆனால் இவருக்கு அந்த மாற்றுத்திறனாளி பெண் நிலை குறித்து தெரிந்தும் கண்டும் காணாதது போல் இருப்பதை என்ன சொல்வது.. சரி இவர் அரசியலுக்கு புதிது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சி நிர்வாகிகள் எங்கே சென்றார்கள்.. ஒட்டு வாங்குவதற்கு மட்டும் அம்மா, அப்பா, தங்கச்சி, அண்னே என வாய் குசாமல் வந்து ஒட்டு கேட்கும் இந்த தில்லாலங்கடிகள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருப்பதைக் கண்டால் கேவலமாக உள்ளது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் என்று ஒருத்தர் இருக்கின்றார்.. அவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே தான்.., உங்கள் ஆளுங்கட்சியின் அதிகாரிகளால் வந்த வினை தான் இந்த சம்பவம், அப்போ உடனடியாக நேரில் சென்று உதவிகளை செய்வது தான் அழகு, ஆனால் இவ்வாறு கண்டும், காணாமல் இருந்தால் என்ன சொல்வது, இது தான் உங்கள் அரசியலா,
மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.. விரைவில் பாடம் புகட்டுவார்கள். காத்திருங்கள்...
தூத்துக்குடியில் நேர்மையாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இந்த அலட்சிய அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், மேலும், உடனுக்குடன் அனைத்து வகையிலும் உதவி செய்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் உதவி செய்த அனைவருக்கும் அந்த குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர் : மு.மணிகண்டன்