மது பிரியர்கள் அதிர்ச்சி., காரணம் என்ன.!
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன். இவர் காலி மது பாட்டிலை அரசு மதுபான கடைகளில் திரும்ப வாங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்.. மேலும், அரசு மதுபான கடைகளில் மது பிரியர்களுக்கு குறிப்பிட்ட அளவு மது வழங்க வேண்டுமென தொடர்ந்து மனு அளித்து வந்தார்..
இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மனு அளித்தார்.
அந்த மனுவில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மது பிரியர்களின் நலன் கருதி தமிழக அரசு மதுபான கடைகளில் மது பிரியர்களுக்கு குறிப்பிட்ட அளவு மில்லி மது தான் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மது வாங்க வரும் மது பிரியர்களிடம் ஆதார் அடையாளத்தை மற்றும் கைரேகை பெற்றுக்கொண்டு மதுபானம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்
இதானல் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
செய்தியாளர் மு.மணிகண்டன்