தூத்துக்குடியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் கடத்தல்.!

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் கடத்தல்.!

தூத்துக்குடியில், இடம் வாங்கல், கொடுக்கல் பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திய நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.!

தூத்துக்குடி, சிதம்பர நகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் மந்திரம் மகன் உலகநாதன் (54), வழக்கறிஞரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றார். இவர் ஒர் இடம் தொடர்பாக, தமிழ்ச்சாலை ரோட்டில் அமைந்துள்ள பிரபல புக் சென்டர் வைத்து நடத்தி வருபவரும், திமுக பிரமுகருமான மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் சரவணன் (44), என்பவரிடம் 20 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். பின்னர், அந்த இடம் கிரயம் ஆகாததால், உலகநாதன் சரவணனிடம் திரும்ப 6 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மேலும், 2 காசோலைகளும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் காசோலையில் போதுமான நிதி இல்லாததால் மதிப்பிழந்த காசோலையாக அந்த காசோலை மாறுகிறது. இதனால் சரவணன் உலகநாதன் என்பவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கு தொடுத்தது மட்டுமில்லாது சரவணன் உலகநாதனின் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த காரையும் பறித்துக் கொண்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு தெரியாது அந்த காருக்கு உலகநாதன் டியூவ் (EMI) கட்டாதது. பின்னர் சரவணனிடமிருந்து அந்தக் காரை வங்கியினர் கைப்பற்றுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தனசேகரன் நகர் மாநகராட்சி பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார் உலகநாதன். அப்போது அங்கு வந்த சரவணன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன், (41), ஆகிய இருவரும் உலக நாதனை அங்கேயே வைத்து சரமாரியாக அடித்து பின்னர் TN69CA2008 என்ற காரில் கடத்திச்  சென்றுள்ளனர்.

பின்னர், அங்கிருந்து ரஸ்னா மாரியப்பன் என்பவரும் சேர்ந்து கொண்டு அந்த காருக்கு (EMI ) கட்டாத அந்த வங்கிக்கு சென்று காருக்கு பணம் கட்டு இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர், சரவணன் உலகநாதனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பணத்தை உடனடியாக தரும்படி மிரட்டலும் கொடுத்துள்ளார். பின்னர், செய்வதறியாது திகைத்த உலகநாதனின் குடும்பத்தார் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு போலீசார் 3 மணி நேரம் கழித்து உலக நாதனை கடத்திச் சென்ற அந்த வாகனத்தை மறித்து சரவணன், பாலமுருகன், கார் ஓட்டுநரான அண்ணாநகர் 2வது தெரு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஜெராஜ் (38), உள்ளிட்ட 3 பேரை பிடித்து அவர்கள் மீது BNS-ல் 296 (b) 115 (2) 140 (3), 351 (3) வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியில், பட்டப்பகலில் வழக்கறிஞரை காரில் கடத்திய நபர்களை போலீசார் மூன்று மணி நேரத்தில் சுற்றி வளைத்து மீட்டது தூத்துக்குடியில் பேசும் பொருளாக மாறியுள்ளது..

செய்தியாளர் மு. மணிகண்டன்.