கராத்தே போட்டி: தட்டி தூக்கிய தூத்துக்குடி மாணவ, மாணவிகள்
தென் மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 20 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.!
ஜப்பானிய முறையிலான மச்சிமா கராத்தே அமைப்பு சார்பில் கோவை மாவட்டம், துடியலூர் ராமகிருஷ்ணா மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். சண்டை பிரிவு, கட்டா பிரிவு, கீயோன்ஸ் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் இசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 20க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம் 11 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இத்தகைய சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கூறும் போது, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளோம். தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைப்போம் என வெற்றி பெற்ற மாணவிகள் தெரிவித்தனர்.