வெறி சோடி காணப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்.!

வெறி சோடி காணப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்.!

தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் சுமார் 45 நாட்களுக்கு மேல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது..

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுற்று புதிய அரசு பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது..

இதில், தமிழக முதல்வரின் மனுக்கள் மீது தீர்வு காண்பது மற்றும் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்து அரசு ஊழியர்களுக்கு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துக் கூறினார்... 

மேலும், மனு அளிக்க வரும் பொது மக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது...