கீதா ஜீவன் கண்கலங்கிய தருணம்., காரணம் என்ன.!

கீதா ஜீவன் கண்கலங்கிய தருணம்., காரணம் என்ன.!

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தூத்துக்குடி எம்பி கனிமொழி பங்கேற்றார். அப்போது பேசிய கனிமொழி, “தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். குறிப்பாக இதுவரை வெற்றி பெறாத கோவில்பட்டியில் இந்த முறை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏற்பட்ட தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கீதாஜீவன் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றியவர். இருந்தபோதிலும் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது,” என கூறியபோது அருகில் இருந்த கீதா ஜீவன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.