தூத்துக்குடி காவல்துறை நிர்வாகத்திற்கு ஓய்வு பெற்ற காவல் துறை நல சங்கத்தினர் கண்டனம்.!

தூத்துக்குடி காவல்துறை நிர்வாகத்திற்கு ஓய்வு பெற்ற காவல் துறை நல சங்கத்தினர் கண்டனம்.!

தூத்துக்குடியில் பணியில் இருக்கும் போது விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தாததால் வேதனையில் காவல்துறையினர்., 

தூத்துக்குடி தெர்மல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பையா (59) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 14 ந் தேதி காலை 6 மணியளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் காலை 6.30 மணியளவில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு தலை காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர், மேல் சிகிக்சைக்காக திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள் நோயாளியாக இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் 19ந் தேதி இறந்துள்ளார். 

பின்னர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இதில் என்னவென்றால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் அரசு மரியாதை (Guard of honour) செலுத்த வேண்டுமாம்.. ஆனால் செலுத்த தவறி விட்டதால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது, அரசு விதிகளின் படி பணியில் இருக்கும் காவல்துறையினர் இறந்தால் அரசு மரியாதை செலுத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தவில்லை.. இதனால் காவல்துறையில் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து காவல்துறையினர் குடும்பங்களும் மன வேதனைக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர்..

இதுகுறித்து ஓய்வு பெற்ற காவல் துறையின் நல சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெபமணி, செயலாளர் ராஜு ஆகியோர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் வேண்டுமேன்றே அரசு மரியாதையை செலுத்தவில்லை. இந்த செயலை கண்டிப்பது மட்டுமில்லாமல், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் வரும் சட்டமன்ற தேர்தல் பணிக்கு அழைத்தால் ஓய்வு பெற்ற காவல் துறையினர் யாரும் செல்ல கூடாது என முடிவு எடுத்துள்ளோம்.

இது சம்பந்தமாக, தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு காவல்துறை இயக்குனர் சென்னை, கூடுதல் காவல்துறை இயக்குனர் சென்னை, தென்மண்டல காவல்துறை தலைவர் மதுரை, திருநெல்வேலி சரகம் காவல்துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இது போன்ற செயல்கள் தமிழகத்தில் எங்கும் நடைபெறக்கூடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

செய்தியாளர் : மு.மணிகண்டன்