டெல்லி ட்ரிப் முதல் மனசாட்சி வரை... கோவில்பட்டியில் கடம்பூர் ராஜீ பேச்சு!

டெல்லி ட்ரிப் முதல் மனசாட்சி வரை... கோவில்பட்டியில் கடம்பூர் ராஜீ பேச்சு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கடம்பூர் ராஜீ சிரித்தபடி, "கனிமொழி திடீர் திடீரென டெல்லி போகிறாரே? காங்கிரஸ் கூட கூட்டணி வைத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எத்தனை தடவை டெல்லி போயிருக்கிறது? தேர்தல் கூட்டணி என்றால் இங்கும் அங்கும் போய் பேசுவது வழக்கமான விஷயம் தான்.

கட்சி தொடங்கி முதல் தேர்தலில் ஆட்சி அமைத்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும் தான். திமுக கூட இல்லை. தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் போனாலும் சரி, தனியாக போட்டாலும் சரி — அது எங்களை பாதிக்காது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” என உறுதியுடன் தெரிவித்த அவர் அதே நேரத்தில், "எங்கள் கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற குரல் இல்லை. அந்த சத்தம் திமுக பக்கம் தான் ஒலிக்குது, என்று அரசியல் சாட்டையை வீசினார்..

2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மை அரசு அல்ல, காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு தான் “மத்தியில் இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதனால் தான் இப்போது காங்கிரஸ் கேட்கிறது!” 

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி குறித்து பேசும்போது,  "அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த வைகோ, ஒருகாலத்தில் என்னைப் பற்றி கொலைப்பழி சுமத்தினார்கள் என்று கதறினார். இன்று அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார் — எந்த மனசாட்சி ஒத்துக் கொண்டது?”

மேலும், 1996ல் அதிமுக கூட்டணியால் மதிமுக அங்கீகாரம் பெற்றது, 2011ல் 12 தொகுதிகள் தர முன்வந்தபோதும் புறக்கணித்தது, பின்னர் திமுக கூட்டணியில் 6 இடங்கள் பெற்றது 

விஜய் தொடர்பான தனிப்பட்ட விவகாரம் குறித்து,  "அது குடும்ப விஷயம். அரசியலாக்குவது சரியில்லை. அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று முடித்தார்..