அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை வேண்டும்., டிஎஸ்பி அலுவலகத்தில் த.வெ.க புகார் மனு.!

அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை வேண்டும்., டிஎஸ்பி அலுவலகத்தில் த.வெ.க புகார் மனு.!

தூத்துக்குடி: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் வெற்றி நன்றி அறிவிப்பு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நன்றி அறிவிப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசினார். 

மேலும், “உடன்குடிக்கு வந்தால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் சட்டையை கிழிப்போம்” என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரைட்டர் தலைமையில் கட்சியினர் திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். அவர்கள், மகேஷ் குமார் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு வழங்கினர். கடந்த சில தினங்களாக உடன்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.