தூத்துக்குடியில் இனிதே ஆரம்பம்., அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை.!

தூத்துக்குடியில் இனிதே ஆரம்பம்., அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை.!

தூத்துக்குடியில் புதியதாக இருதய சிகிக்சை அளிக்கும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.!

உலகத்தரம் வாய்ந்த இருதய சிகிச்சை அளிக்கும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை தூத்துக்குடியில் துவங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்ட இம்மருத்துவமனையில், கேத்லேப், ஐசியூ, ஐ எம் சி யு, எக்கோ, டி எம் டி, இ சி ஜி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை பெருங்குளம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்த மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக், பேஸ் மேக்கர், வாழ்விலோ பிளாஸ்டி, லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி, குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை, நுண்துளை பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் 24 மணி நேரமும் அளிக்கப்படும் என மருத்துவமனை இயக்குனர்கள் தெரிவித்தனர்.

கேத் லேப் டாக்டர். மாரிமுத்து, வ உ சி கல்விக் கழக செயலாளர் ஏ பி சி பி சொக்கலிங்கம், அஇஅதிமுக பிரமுகர் சரவணப் பெருமாள், தொழிலதிபர் டி.ஏ.தெய்வநாயகம் தமிழ்நாடு சைவ வேளாளர் பேரவை மாநில தலைவர் ஏ. ஆர். லட்சுமணன், வ உ சி நற்பணி மன்றத்தை சார்ந்தவர்கள், பல்வேறு மருத்துவமனையை சார்ந்த ஏராளமான மருத்துவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.