தூத்துக்குடியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: “நிலை படை (பறக்கும் படை ) ” நியமனத்தில் சர்ச்சை.!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: “நிலை படை (பறக்கும் படை ) ” நியமனத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் பரபரப்பு.!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தேர்வு மையங்களில் நியாயமான முறையில் தேர்வுகளை கண்காணிக்கும் நிலை படை என்ற சொல்லகூடிய “பறக்கும் படை” (Flying Squad) ஆசிரியர் நியமனத்திலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்திலும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை தேர்வு மையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் துறை அலுவலராகவும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் முதன்மை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு இருவரும் இணைந்து தேர்வை நடத்தினர். இப்போது அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். அது போல "நிலை படை" என்பது தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளைத் தடுக்கவும், தேர்வு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் அமைக்கப்படும் அதிகாரப்பூர்வ குழுவாகும். ஆண்டுதோறும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இருவரும் இணைந்து சீனியார்ட்டி இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டில் 2003 வரை இரு பள்ளி ஆசிரியர்களையும் சீனியார்ட்டி அடிப்படையில் நியமித்து அதன்பின் 2012 வரையுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை நிலை படைக்கு நியமித்து உள்ளனர்.
இதனால் அடுத்தாண்டு ஓய்வு பெறும் மூத்த ஆசிரியர்கள் தேர்வறை சூப்பர்வைசராகவும் பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் கூட முடிக்காத மிகவும் இளைய உடற்கல்வி ஆசிரியர்கள் பறக்கும் படை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பணியேற்று 10 - 15 வருடம் ஆன அரசுப் பள்ளி ஆசிரியர் துறை அலுவலர், முதன்மைக் கண்கானிப்பாளராகவும் 25 ஆண்டு பணியாற்றி அடுத்த ஆண்டு ஒய்வு பெறும் ஆசிரியர்கள் பறக்கும் படை, தேர்வறை சூப்பர் வைசராகவும் நியமிக்கும் குளறுபடியால் நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டுகள் வரை பின்பற்றப்பட்ட நடைமுறைகள் இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளனவா என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “வினாத்தாள் தயாரிப்பு, பயிற்சி வழங்குதல் போன்ற பணிகளுக்கு எங்களை நியமிக்கிறார்கள். ஆனால் தேர்வை காத்து கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பில் மட்டும் எங்களை புறக்கணிப்பது ஏன்?
ஆசிரியர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் படிப்படியாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்கள் பறக்கும் படைக்கு நியமனமும் முதன்மை கண்காணிப்பாளர் பணியும் முறையாக நியமனம் செய்யப்படவில்லை.
“யாரை திருப்திப்படுத்த இந்த புதிய நடைமுறை? ஏன் திடீர் மாற்றம்? மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், விதிமுறைகளை மாற்றாமல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே பொதுக் கோரிக்கையாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற புதிய விதிகள் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
செய்தியாளர் மு.மணிகண்டன்