சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு.!

சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு.!

தூத்துக்குடி: சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தியதாக 14 பேர் கைது செய்யப்படுள்ளனர். 

சோஷியல் மீடியாக்களை தவறாக பயன்படுத்துவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ஆப்பரேஷன் டிஜிட்டல் விஜில்' என்ற பெயரில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டம் வாரியாக சமூக ஊடக கண்காணிப்பு பிரிவினர், சைபர் கிரைம் போலீசார் அடங்கிய குழு, வெறுப்பைதூண்டும் பதிவுகள், கொலைமிரட்டல், ஆயுதங்களை காட்டி அச்சுறுத்துதல், போதைப் பொருள் குறித்து பேசுதல், ரோடுகளில் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக வானங்களை இயக்குதல் உட்பட சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கண்காணித்தது. இதில் பிப்., 22 முதல் 24 வரை 55க்கும் மேலான சட் டவிரோத ஆன்லைன் பல்வேறு தளங்களில் பதிவுகள் கண்டறியப்பட்டன. 

அதாவது, மதுரை -4, திண்டுக்கல்-13, தேனி - 6, ராமநாதபுரம் - 5, சிவகங்கை - 11, விருதுநகர்-3, நெல்லை -9, தென்காசி-3, துாத்துக்குடி -9,  கன்னியாகுமரி - 1 உட்பட 64 வழக்கு கள் பதிவு செய்து, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஜிட்டல் தளங்களை சட்டவிரோதமாக பயன்டுத்தினால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தென்மண்டல ஐ.ஜி., விஜேயந்திர பிதாரி தெரிவித்துள்ளார்..