அக்டோபர் 11-ம் தேதி தூத்துக்குடி வரும் விஜய்.,அனுமதி வேண்டி தவெகவினர் மனு.!

அக்டோபர் 11-ம் தேதி தூத்துக்குடி வரும் விஜய்.,அனுமதி வேண்டி தவெகவினர் மனு.!

அக்டோபர் 11-ம் தேதி தூத்துக்குடி-க்கு விஜய் வரும் நிலையில், காவல்துறை அனுமதி வேண்டி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தவெக-வினர் மனு அளித்தனர். 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த மாதம் அக்டோபர் 11-ம் தேதி தூத்துக்குடி-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் வருவதையோட்டி காவல்துறை அனுமதி வேண்டி தவெக-வினர் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த டேவிட் செல்வம், வழக்கறிஞர் பிரைட்டர், ஜே. கே. ஆர் முருகன், எஸ்.டி.ஆர் சாமுவேல், ஆகியோர் விவிடி சிக்னலில் அனுமதி கேட்டுள்ளனர். மனுவை வாங்கிக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து பின்பு அனுமதி தரப்படும் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, காவல்துறையினர் கொடுக்கும் விதிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்வோம் காவல்துறை-க்கு எந்தவொரு இடையூறும் செய்யமாட்டோம். திமுக தொடர்ந்து எங்கள் தலைவர் விஜய் அவர்களை குறை சொல்லி வருகிறார். முதலில் அவர்கள் யோக்கியர்கள் அல்ல, எந்த திட்டங்களையும் அவர்கள் மக்களுக்கு செய்யவில்லை.

நடிகர் வந்தால் கூட்டம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கூறுவது உண்மை தான். விஜயலெட்சுமி வந்தாலும் கூட்டம் வரும். எங்கள் தலைவர் விஜய்-யை அணில் என்று சொல்லி வரும் சீமான் ஒரு நச்சி எலி . அணில் வீட்டிற்குள் வந்தால் விரட்டமாட்டார்கள் ஆனால் நச்சு எலி வீட்டுற்குள் வந்தால் அடித்து விரட்டுவார்கள் அதனை சீமான் புரிந்துகொள்ளட்டும் என்றார்.