கோவில்பட்டியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் சஸ்பெண்ட்.!
காவல்துறையின் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் சஸ்பெண்ட்.!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக செல்வகுமார் (36), என்பவரும், அதே பிரிவில் இந்திராகாந்தி (32) என்பவரும் காவலராக பணியாற்றி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் என்ன சண்டையோ என்ன என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த மாதம் 17 ம் தேதி நடுரோட்டில் இருவரும் அதாவது, காவலர் என்பதை மறந்து விட்டு முட்டி, மோதி (வாய் சண்டை ) போட்டுள்ளனர்.
நடு ரோட்டில் சண்டையிட்டால் வெளியே தெரியாமல் இருக்குமா என்ன., வெளியே தெரிந்து விட்டது.. அதனால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யபப்பட்டனர்.
இடமாற்றம் செய்தும் இவர்கள் அக்க போர் அடங்கவில்லை.. இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உயிருக்கு பயந்து பெண் காவலரும் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசி மணி உத்தரவிட்டார். இதேபோல, காவல் துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் இந்திராகாந்தி வெளியூரில் இருப்பதாக கூறியதால் கோவில்பட்டி கிழக்கு போலீசார் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவை ஒட்டியுள்ளனர்.
என்னென்ன அக்கப்போர் பண்றாங்க.