தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜை.!

தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜை.!

தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!

தூத்துக்குடி மாநகர், தமிழ் சாலையில் அமைந்துள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டு சரஸ்வதி, விநாயகர், லட்சுமி ஆகிய சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பழங்கள் படையலிடப்பட்டது. மேலும், இந்த பூஜையில், செய்தி சேகரிக்கும் லோகோக்கள் வைக்கப்பட்டு பின்னர் விளக்கேற்றப்பட்டு, ஊதுபத்தி முதலான தூபதீபங்களோடு பூஜை நடத்தப்பட்டது. செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மக்கள் பணி சிறக்கவேண்டுமென, வழிபட்டனர். சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தால், பிரஸ் கிளப் அலுவலகத்தில் பக்தி மணம் கமழ்ந்தது.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி பிரஸ் கிளப் மன்ற தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜி, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மன்ற கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள், லெட்சுமணன், இருதய ராஜ், கண்ணன், உறுப்பினர்கள், காதர், சித்திக், மாணிக்கம், ஜெயராமன், கருப்பசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.