தூத்துக்குடியில் பாஜக அணி பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.!
தூத்துக்குடி, தெற்கு மாவட்ட பாஜக அணி, பிரிவு மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டம் பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணி, பிரிவு தலைவர்கள் பொறுப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அணி, பிரிவு மாவட்ட தலைவர்களுக்கான அறிமுக கூட்டமானது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது.
இதில், இளைஞர் அணி தலைவராக A. சக்திவேல், மகளிர் அணி A. வெள்ளத்தாய், விவசாய அணி S. சங்கர், ஓபிசி அணி P. வென்னி மாலை, பட்டியல் அணி V. பெரியசாமி, எஸ்.டி அணி K. ஆறுமுகம், சிறுபான்மை அணி Y. கலைச்செல்வன் உட்பட ஏழு அணி தலைவர்களும், விருந்தோம்பல் பிரிவு M. வெங்கடேஷ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் D. சின்ன தங்கம், வழக்கறிஞர் பிரிவு K. சீனிவாசன், தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு K. ராமகிருஷ்ணக்குமார், மருத்துவ பிரிவு K. பாலாஜி, கூட்டுறவு பிரிவு A. செந்தூர் பாண்டியன், தொழில் பிரிவு M. சங்கர் ராஜா, கலை மற்றும் கலாச்சார பிரிவு D. ஞானப்பிரகாசம், நெசவாளர் பிரிவு N. சுடலைகண், கல்வியாளர் பிரிவு M. பாலசுப்பிரமணியன், மீனவர் பிரிவு J. மேனகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு A. மகேஸ்வரன், அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு M.C.K. சின்னத்தம்பி, ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு T. ஓம் பிரபு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு T. ராஜகோபால், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு M. சண்முக ஆனந்த், பிரச்சார பிரிவு V. சுரேஷ் ராஜா, அமைப்புசாரா தொழில் பிரிவு E. சித்திரை வேல், வர்த்தகர் பிரிவு K. செந்தில்குமார், பொருளாதாரப் பிரிவு M. மகேஷ், ஊடகப்பிரிவு R. ஜெயக்குமார், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவு S. முத்துக்குமார் ராஜா, சமூக ஊடகப்பிரிவு S. பர்வதவர்த்தினி, தகவல் தொழில்நுட்ப பிரிவு K. சண்முகநாதன் என 24 மாவட்ட தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இதில், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், செல்வராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் கேஎன்ஆர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் செயலாளர்கள் முத்துராமலிங்கம், சிவராமன், மாசாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட தலைவர் சித்ராங்கதன் புதியதாக பொறுப்பேற்கும் அணி, பிரிவு தலைவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.