தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக – முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேட்டி
அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்ல பாண்டியன் தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலகத்தை திறந்து வைத்தார்.!
தூத்துக்குடி, டூவிபுரம் 5வது தெருவில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி கொடியையும் ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தூத்துக்குடி மீனவர் பகுதி அதிகம் வாய்ந்த மாவட்டம் “திமுக ஆட்சியில் துண்டில் வளைவு பணிகள் பாதி மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மீதமான பணம் எங்கு சென்றது தெரியவில்லை. இதனால் படகுகள் சேதமடைந்து மீனவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். “திமுக சொல்வதை செய்வோம் என கூறினார்கள். ஆனால் சொன்னதையும் செய்யவில்லை, செய்ததையும் சொல்லவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது.. ஆகவே, 2026 தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றம் அதிமுகவிற்கு ஒதுக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? எடப்பாடி பழனிசாமி ஆசியோடு அதிமுக மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடும்..
தவெக தலைவர் விஜய், “அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவை மறந்துவிட்டனர்” என கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது? “விஜய் அவரையே அவர் மறந்துவிடுவார். மேடைக்கு மேடை மாற்றி பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி இருக்கும்போது அதிமுக கட்சி கூட்டங்களில் எந்த இறப்பும் இல்லை.
மேலும், “வான்கோழி மயிலாக முடியுமா?” விஜய் வெளியில் வர மாட்டார். சினிமாவில் 10 பேரை அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர். நடிகை கடை திறக்க வந்தாலும் கூட்டம் கூட தான் செய்யும் என்றார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்