தூத்துக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.!

தூத்துக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வேடநத்தம் பகுதியில் வசித்து வரும் அந்த மாணவி நேற்று இரவு முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று மதியம் அருகிலுள்ள காட்டு பகுதியில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.