ஸ்டாலின் தேர்தல் கூட்டத்தில் மக்கள் வெளியேறல்: காலியான நாற்காலிகள் கவனம் ஈர்ப்பு.!

ஸ்டாலின் தேர்தல் கூட்டத்தில் மக்கள் வெளியேறல்: காலியான நாற்காலிகள் கவனம் ஈர்ப்பு.!

தூத்துக்குடி: தூத்துக்குடியில், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் இடைவேளையில் வெளியேறியதால், நிகழ்வு சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது

தூத்துக்குடி மாவட்டம், சங்கரப்பேரி பகுதியில், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகள்—தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரம்—இவற்றின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்கள் மூலம் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அமர்த்தப்பட்டிருந்தனர். ஆரம்பத்தில் கூட்டம் நிறைந்து காணப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பலர் ஆர்வமின்றி அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர்.

இதன் காரணமாக, கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாகத் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு, தேர்தல் சூழ்நிலையில் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.