"வேட்பாளர் ready… படிவம் மட்டும் not ready!"
தூத்துக்குடி: “தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் அரசியல் பரபரப்பை விட காமெடி மற்றும் பரிதாபக் காட்சிகளால் நிரம்பியது..
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (சசிகலா) சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அமுதா என்பவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் 3 மணி அளவில் முடியும் தருவாயில் இருந்த போது சரியாக 2:40 மணிக்கு வந்தார் வேட்பாளர் அமுதா. அதன் பிறகு நடந்தவை கொஞ்சம் சிரிப்பையும், கொஞ்சம் வேதனையையும் தான் கிளப்பியது. ஆம், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அமுதா, அதிகாரியுடன் நம்பிக்கையுடன் வேட்பு மனுவை நீட்டியதும், தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி முகத்தை பார்த்து விண்ணப்ப படிவம் எங்கே? என்றார்.
வேட்பாளர் அமுதா., “இதுதானே படிவம்? என்றவுடன் அதிகாரி “அது இல்லைங்க.. “படிவம் எங்கே? என்றார்.. உடன் வந்தவர்கள்: “கார்ல வச்சுட்டோம். எடுத்துட்டு வரோம் என்று ஓடோடி சென்று எடுத்து வந்தனர்.
படிவம் வந்ததும் பார்த்தால்… அதுல ஒரு வார்த்தையும் நிரப்பல.. அதிகாரி கொஞ்சம் கோபம் அடைந்து “முதல்ல இதை நிரப்பிட்டு வாங்க என்றவுடன் அதற்குள் வேறு ஒரு படிவம் எடுத்து வந்தார்கள் வேட்பாளருடன் வந்தவர்கள்.. பின்னர், அதிகாரி: “2B படிவம் கொடுங்க…” அங்க இருந்தவர்கள் எல்லாம் ஒரே குழப்பம்:
“2B-ஆ? அது என்ன புதிய subject-ஆ?” என்று அவர்கள் கையில் வைத்திருந்த அத்தனை படிவத்தையும் அலுவலர் கையில் நீட்டிய நிலையில், அந்த விண்ணப்ப படிவத்தை பார்த்த தேர்தல் அலுவலர்.. திடுக்கிட்டார்.. இது என்ன நான் நிரப்பக்கூடிய இடத்தில் முழுவதும் வேட்பாளர்களாகிய நீங்களே முழுவதும் நிரப்பி விட்டீர்கள்.. இதனை எதிர்பார்க்காத தேர்தல் அலுவலர் சிரிப்பதா? பரிதாபப்படுவதா என்பதே தெரியாமல் வாயை மூடி கொஞ்சம் சிரிக்க தொடங்கினார்...
பின்னர் வேட்பாளரை உறுதி மொழி வாசிக்க கூறியப்போது வேட்பாளர் சற்றே திணற, அருகில் இருந்த மகள் ‘லைவ் டப்பிங்’ கொடுத்தார். அதையும் அதிகாரி தடுத்து, “வேட்பாளரே வாசிக்க வேண்டும்” என்றார். அப்போது பின்னால் இருந்து ஒருவர் “அவருக்கு கண்ணாடி இல்லாததால் கண்ணு தெரியாது.. என்று கூற இறுதியில் மெதுவாக வாசிப்பை முடித்தார் வேட்பாளர்..
பின்னர், வேட்பு மனு வாங்கிட்டேன்… ஆனா accept ஆக வாய்ப்பு கம்மி என்றவுடன் அதைக் கேட்ட அமுதா அழத்தொடங்கினார்.. பின்னர், மகள் “என்ன மேடம் தப்பு? என்று அதிகாரியிடம் கேட்க “படிவமே சரியா இல்லையே! என்றவுடன் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள்..
சிறிய தவறுகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. ஆனால் முழுவதுமே தவறாக இருந்தால் என்ன செய்வது?....
செய்தியாளர் மு.மணிகண்டன்