“தூத்துக்குடியில் சிறுமியின் பிரச்சார பாடல் நடிகர் ஸ்ரீ நாத் வெளியிட்டார்.!

“தூத்துக்குடியில் சிறுமியின் பிரச்சார பாடல் நடிகர் ஸ்ரீ நாத் வெளியிட்டார்.!

தூத்துக்குடி: தமிழக வெற்றிக்கழகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் போட்டியிடுகிறார். இவர் நேற்று 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அவர் பின்னர், தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மீனவர் மற்றும் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியைச் சேர்ந்த பாடலாசிரியர் சுஜய் என்பவர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கான தேர்தல் பிரச்சார பாடலை எழுதியுள்ளார்.. இந்த பாடலை பாடலாசிரியர் சுஜியின் மகளும் ஐந்தாம் வகுப்பு மாணவியுமாண சைஜு பாடியுள்ளார்.

இதனை, தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் வேட்பாளர் ஸ்ரீநாத் பாடலை வெளியூட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், சிறுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. தமிழக வெற்றி கழகத்திற்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.. எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் தான் கேட்கிறது. எனவே 2026 இல் விஜய் முதல்வராவது உறுதி., 

சினிமா துறையில் சாதனை படைத்ததை போன்று அரசியல் துறையிலும் சாதனை படைத்து முதல்வராக பதவியேற்பார் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் கோல்டன் தமிழக வெற்றி கழக நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடன் இருந்தனர்.