ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 28ல் 21 மனு ஏற்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு பரிசீலனை: 28ல் 21 ஏற்கப்பட்டது, 7 நிராகரிப்பு.!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சார்பில் மொத்தம் 28 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 28 மனுக்களில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மொத்த விவரம்:
மொத்த வேட்பு மனுக்கள்: 28
ஏற்கப்பட்ட மனுக்கள்: 21
நிராகரிக்கப்பட்ட மனுக்கள்: 7
கட்சி சார்ந்த வேட்பாளர்கள்: (மொத்தம்: 16)
நாம் தமிழர் கட்சி – அனுசுயா, ஐஷ்வர்யா
நாம் இந்தியர் கட்சி – சுப்பு லட்சுமி
திமுக – ராமஜெயம், பாலா
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – சுந்தர் ராஜ், கோபிநாத்
தமிழக வெற்றிக் கழகம் – மதன் ராஜா, வனிதா
தமிழக வாழ்வுரிமை கட்சி – செல்வக்குமார்
அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் – அமுதா
புதிய தமிழகம் – கிருஷ்ணசாமி, செல்லதுரை
நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் – அருணா தேவி
கூடுதல் மனுக்கள்: 2
டம்மி மனுக்கள்: 5
சுயேட்சை வேட்பாளர்கள்: (மொத்தம்: 12)
வேத பிரகாஷ், ஆனந்த், முருகன், கண்ணன், ராஜ், தயாளன், சண்முகராஜன், தர்மர், தென்கரை மகாராஜன், முத்து செல்வம், லட்சுமணன், ராஜா
பாலின விவரம்:
ஆண்கள்: 20
பெண்கள்: 8
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் (7):
தயாளன் (சுயேட்சை)
தர்மர் (சுயேட்சை)
அமுதா (அ.இ.பு.த.ம.மு.க)
பாலா (திமுக மாற்று வேட்பாளர்)
ஐஷ்வர்யா (நாம் தமிழர் – மாற்று வேட்பாளர்)
அனுசுயா (நாம் தமிழர் – இரண்டு மனுவில் ஒன்று)
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் – (இரண்டு மனுவில் ஒன்று)
வேட்பாளர்கள் மாற்று (Dummy) மற்றும் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சிலர் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்ததால், அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கட்சிகளின் பிரதான வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ளன.
தேர்தல் களத்தில் தற்போது 21 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்