ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தைக் கோரும் அருணா தேவி: மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்!.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் சூழல் ஒரு வித்தியாசமான காட்சியை கண்டது. ஆம், வழக்கமாக கார்கள், ஜீப்புகள் நிரம்பியிருக்கும் தேர்தல் ஊர்வலங்களுக்கு மாறாக, இம்முறை மாட்டு வண்டி முன்னிலையில் மக்கள் கவனம் ஈர்த்தார் "நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்' கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞரும், அந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அருணா தேவி..
ஓசனுத்து-புதியம்புத்தூர் ஜங்ஷன் முதல் தனது வேட்புமனு ஊர்வலத்தை தொடங்கிய அருணா தேவி பாரம்பரியத்தின் மணம் வீசும் அந்த ஊர்வலத்தில், மாட்டு வண்டியில் முன்னணியில் சென்றனர். மேளம், தாளம் முழங்க உற்சாக குரல்கள் ஒலித்துக்கொண்டே, கட்சியின் தலைவர் பொன் குமரன் தலைமையில் ஆதரவாளர்கள் பின்னால் நீண்ட வரிசையாக நகர்ந்தனர்.
இந்த ஊர்வலம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்ததும், அருணா தேவி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சுப்புலட்சுமியிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அருணா தேவி கூறும் போது, மக்கள் மக்கள் குரல்வளை எங்கு எல்லாம் ஒடுக்கப்படுகிறதோ அங்கு களத்தில் நின்று சம நீதியை பெற்று தந்திருக்கின்றேன்.
பல கட்சிகள் இருந்தாலும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை குறிப்பாக குடிநீர் பெண்கள் பாதுகாப்பு குறைபாடு, வேலைவாய்ப்பு, சாலை வசதிகள், காற்றாலையால் விவசாய நிலங்கள் அழிப்பு போன்றவைகள் உள்ளது..
ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றால் அரசு மருத்துவமனை கொண்டு வருவேன்.. பெண்களுக்கு என்று ஒட்டப்பிடாரத்தில் பள்ளிகளோ, கல்லூரிகளோ கிடையாது.. வெற்றி பெற்றால் பெண்களுக்கென்று தனியாக பள்ளி கல்லூரிகள் அமைத்து தருவேன். பெண்கள் விழிப்புணர்வு மையம் அமைத்து தருவேன். ஒட்டப்பிடாரம் தொகுதியை செழிப்பாக மாற்றி காட்டுவேன்.. திராவிட கட்சிகள் மதுவை ஒழிப்பேன் என்று கூறி வருகிறார்கள் ஆனால் மதுவை ஒழித்த பாடில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் விதவைகள் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாக கனிமொழி குற்றம் சாட்டினார்.. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு மதுக்கடைகளை அகற்றவில்லை. ஆகவே போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.
குட்டி சிங்கப்பூர் என்று ஓட்டப்பிடாரம் தொகுதியை அழைப்பார்கள். ஆனால் விவசாயம், தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை. ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் விவசாயிகளுக்கு எதிரியான காற்றாலைகளை அகற்ற பாடுபடுவேன் என்றார்..
"திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் "நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வரவேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த முறை மக்கள் மாற்றத்தை தேர்வு செய்வார்கள். "நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி உறுதியாக வெற்றி பெறும்,” என நம்பிக்கையுடன் கூறினார்.
மாட்டு வண்டியில் தொடங்கிய இந்த அரசியல் பயணம், ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தின் விதையை விதைக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும். ஆனால் இன்று, அந்த ஊர்வலம் மக்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்பியது.. “இம்முறை மாற்றமா?
செய்தியாளர் மு.மணிகண்டன்