கீதா ஜீவன் மற்றும் அவரது சகோதரர், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கடும் ஊழல்-தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சி. த செல்ல பாண்டியன் பேச்சு.!

கீதா ஜீவன் மற்றும் அவரது சகோதரர், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கடும் ஊழல்-தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்  சி. த செல்ல பாண்டியன் பேச்சு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக சி. த செல்ல பாண்டியன்  போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் 3ம் மைல் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி வேட்பாளர் செல்ல பாண்டியன், திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மதுபான கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. கீதா ஜீவன் மற்றும் அவரது சகோதரர், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். நகரில் பூங்காக்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகரில் கஞ்சா பழக்கம் அதிகரித்து, மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் தோல்வி அடைவது உறுதி.,

மேலும், மழை வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தவன் நான். எடப்பாடி பழனிசாமியும் தூத்துக்குடிக்கு ஓடோடி வந்தார்.. ஆனால், கீதா ஜீவன், கனிமொழி என்ன செய்தார்கள்? ஆகவே, அதிமுக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.