தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி: கீதா ஜீவன் நம்பிக்கை.!
தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கீதா ஜீவன் போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கும் போது திமுக மற்றும் தவெக இடையே போட்டி இருப்பதாக கூறியதற்கு பதிலளித்த அவர், “ஒரு வாரமாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தேர்தலுக்குப் பிறகு சரியான பதில் கிடைக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டம்-ஒழுங்கு குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சி இருண்ட காலமாக இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தன. பல இடங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. பொள்ளாச்சி சம்பவம் போன்றவை அதற்கு உதாரணம்.
மேலும், “2021ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், எந்த புகாராக இருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து புகார்களும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
கோயம்புத்தூர் சம்பவத்தில் 129 நாட்களில் தண்டனை பெற்றுத் தந்தது மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது இதற்குச் சான்று.
“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருகின்றனர்..
தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இந்தத் தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்,” என கீதா ஜீவன் தெரிவித்தார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்