கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சி.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயல்பட்டினம் மகைதீன் பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதலே கள்ள ஓட்டுகள் பதிவாகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வாக்களித்து வெளியே வந்த ஒரு பெண் வாக்காளரின் கைவிரலில் இருந்த மையை அகற்றி, அவரை மீண்டும் வாக்களிக்கச் செய்வதற்காக சிலர் முயன்றதாக வீடியோவில் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண்ணை ஆட்டோவில் அமர்த்தி, மறுமுறை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்