அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டில் பணம் பறிமுதல்.!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஏற்பட்ட பிளவில் சசிகலா – டி.டி.வி. தினகரன் அணியுடன் இணைந்ததால், அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
தற்போது நடைபெறும் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், “குக்கர்” சின்னத்தில் சுந்தரராஜ் மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் வருகை தந்து வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில், 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
6 லட்சம் 38 ஆயிரம் ரூபாய் மற்றும் வேறு ஒரு பையில் இருந்த ரூ.14 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..
இதில் மொத்தமாக சேர்த்து 48 லட்சத்து 3 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
ஆனால், வீட்டில் கைப்பற்றப்பட்ட 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு வேட்பாளர் தரப்பில் கணக்கு வைத்துள்ளனர்..
ஆனால், வீட்டிற்கு வெளியே இருந்த 20 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம் கிடையாது என்று வேட்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சிகள் நடந்ததாக பல இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சூழலில், ஒட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் லட்ச கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர் மு.மணிகண்டன்