அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்கு.!

அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்கு.!

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் தொடர்பாக தூத்துக்குடியில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில், தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் தீவிரமாக பணியாற்றி வந்தார். பின்னர், அஜிதாவிற்கு சீட் கொடுக்கவில்லை என்று கூறி அவர் கட்சியில் இருந்து விலகி, கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக கட்சியினர் சிலர் ஆட்டோவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த பிரசார ஆட்டோவை தூத்துக்குடி லயன்ஸ் டவுனில் உள்ள அஜிதா ஆக்னல் வீட்டு முன்பு நிறுத்தி பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள், பிரசார ஆட்டோவை தடுத்து நிறுத்தி, மிரட்டல் விடுத்ததுடன் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வக்கீல் ஜேசுதாஸ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது