Thupparithal
செய்திகள்

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: தூத்துக்குடி அருகே வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கிராமத்தை சேர்ந்த பகீரதன் – ரோஸிட்டா தம்பதியினரின் திருமண விழாவை முன்னிட்டு, அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் திருமண விழாவிற்கு வைத்த பேனர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பேனரில் செய்தி நாளிதழில் வரும் செய்தி தலைப்புகள் போல “சுப்பராயபுரத்தில் பரபரப்பு – வாலிபர் கைது” என்ற தலைப்பில் வினோதமான முறையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பேனரில் “பெண்ணின் மனதை திருடியது குற்றம்” எனவும் அந்தக் குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களது புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தது மணமகன் குடும்பத்தினர் எனவும், இந்த குற்றத்திற்கு தண்டனையாக மூன்று முடிச்சு போடுவதை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேனரை கடந்து செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Related posts

தூத்துக்குடி அரிமா சங்கம் மற்றும் வ.உ.சி. கல்லூரி இணைந்து நடத்தும் 55 வது தேசிய நூலக வார விழா;! அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

Admin

கோவில்பட்டியில் பள்ளி ஆண்டு விழாவில் சிலம்பம் ஆடி, தீ விளையாட்டு விளையாடி அசத்திய மாணவிகள்

Admin

தூத்துக்குடி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் புதிதாக மூன்று வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா; ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!