தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்றத்தை அடக்கிய தொகுதி, தூத்துக்குடி மக்களவை தொகுதியாகும்…
இந்த நிலையில், தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் காலை 7.10 மணியளவில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை பதிவு செய்ய வருகை தந்தார். அப்போது, அதிமுக வேட்பாளரின் பூத் ஏஜென்ட் ஒருவர் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை வைத்துள்ளார்..
இதனை அறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறி அப்புறப்படுத்துமாறு கூறினார்… அதன் பின் தேர்தல் அதிகாரி அந்த மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர்..
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது…