Thupparithal
அரசியல்

திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது- வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகனிடம் பொது மக்கள் கூறிய அந்த வார்த்தை……!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும், காலை, மாலை இரு வேலைகளிலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்குகள் சேகரித்த வண்ணம் உள்ளார்..

இந்நிலையில், இன்று (03.04.2024) காலை கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அவர், பூங்கா அருகே கஷாயம் விற்று கொண்டிருந்த வயது முதிர்ந்த பெண்மணி-யிடம் நலம் விசாரித்து கஷாயம் அருந்தினார்..

பின்னர், இனிகோநகர் பகுதிக்கு சென்று அங்குள்ள பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.. அப்போது, அங்குள்ள மக்கள் தெரு பகுதிக்கு வேகத்தடை வேண்டும் எனவும், ரோடு இல்லாமல் சாக்கடையில் கிடந்த நாங்கள் திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் ரோடு வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைத்ததாக கூறி மேயர் ஜெகன் பெரியசாமி-க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

மேலும், அப்பகுதி மக்களின் சில கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடியாக அதனையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்…

பின்னர், பூபால்ராயர் புரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் மேயர் ஜெகன் வாக்குகள் சேகரித்தார்….

Related posts

கந்த சஷ்டி விரத பக்தர்களுக்கு கோவிலில் தங்க அனுமதி மறுப்பு- தூத்துக்குடி பாஜக கடும் கண்டனம்!.

Admin

விளாத்திகுளத்தில் ஒன்றிய செயலாளர் செல்வி நேதாஜி தலைமையில் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!.

Admin

கலைஞர் நூற்றாண்டு விழாவை பொறியாளர் அணி சிறப்பாக கொண்டாட வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு…!

Admin

Leave a Comment

error: Content is protected !!