தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அஇஅதிமுக சார்பில் வேட்பாளராக சிவசாமி வேலுமணி போட்டியிடுகின்றார்… இவரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு அஇஅதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தூத்துக்குடி மாநகரில் உள்ள திரேஸ்புரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்…
அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் எத்தனையோ பொய் வாக்குறுதிகளை திமுக அள்ளி வீசி தமிழக மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டில் அத்தனை எம்பிகளும் ஜெயித்தார்கள்… தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி ஜெயித்தார்.. ஆனால் கனிமொழி 5 வருடத்தில் சொல்லிக் கொள்ளுமாறு எதுவும் திட்டம் கொண்டு வந்திருக்கின்றாரா? இந்த மக்களுக்கு ஏதேனும் செய்துள்ளாரா? தேர்தல் சமயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தார்… தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்க்காக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்களே தவிர மக்களோடு மக்களாக மக்களை சந்தித்து உள்ளாரா?. மக்கள் தேவைகளை பற்றி கேட்டுள்ளாரா?
கனிமொழி-யின் பிரச்சாரத்தை டிவியில் பார்த்தேன்.. அவர் ஏதோ எதிர்க்கட்சி எம்பி மாதிரியும், இந்த தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றால் எல்லாவற்றையும் சரி செய்வோம் என்பது போல் பேசுகின்றார்… கடந்த மூன்று வருடமாக தமிழ்நாட்டில் திருட்டு திமுக ஆட்சி தானே நடந்து கொண்டிருந்தது.. நீங்கள் தானே 5 வருடமாக எம்பியாக இருக்கின்றீர்கள்.. அப்போது நீங்கள் அந்த சமயத்தில் மக்களுக்கு நல்லது பண்ணி இருக்கலாமே ஏன் பண்ணவில்லை.. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூச்சம் இல்லாமல் வந்து மக்களை சந்தித்து மறுபடியும் ஒட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு வருகின்றீர்கள்..
கனிமொழி பிரச்சாரத்திற்கு வரும்போது மக்கள் கேட்க வேண்டியது என்னவென்றால், கனிமொழி அக்கா, கனிமொழி அக்கா என்ன சொன்னிங்க.. எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று பீலா வீட்டிங்க… கனிமொழி அக்கா, கனிமொழி அக்கா என்ன சொன்னிங்க தண்ணீர் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பேன் என்று பீலா வீட்டிங்க.. கனிமொழி அக்கா, கனிமொழி அக்கா என்ன சொன்னிங்க சிலிண்டர் விலை குறைப்பேன் என்று பீலா விட்டீங்க… கனிமொழி அக்கா, கனிமொழி அக்கா என்ன சொன்னிங்க கஞ்சா, போதை எல்லாம் ஒழிப்பேன் என்று பீலா விட்டீங்க. கனிமொழி அக்கா, கனிமொழி அக்கா என்ன சொன்னிங்க முதல் கையெழுத்து மது ஒழிப்பேன் என்று பீலா விட்டீங்க.. உருட்டு, உருட்டு, உருட்டு, உருட்டிட்டு மறுபடியும் திருட்டு திமுகவிற்கு ஒட்டு போட சொல்லி கேட்கிறீர்களே உங்களை எப்படி நம்புவது என்று கேட்க வேண்டும்….
கஞ்சா போதை எல்லாம் ஒழிப்பேன் என்று பீலா விட்டீங்க
திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது.. தமிழ்நாடு தள்ளாடி கொண்டு இருக்கின்றது…. குடிகாரன் புருஷனா கிடைச்சா பெண்கள் என்ன எல்லாம் கொடுமை சந்திப்பார்கள்.. அதே புருஷன் இறந்தால் எவ்வளவு வேதனையை சந்திப்பார்கள் என்று சாராயம் விற்கின்ற ஸ்டாலினுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணாக, தாயாக ஒரு மனைவியாக கனிமொழிக்காவது புரிய வேண்டும் அல்லவா, பெண்களுக்காக, மக்களுக்காக சாராய கடையை மூட சொல்லி அண்ணன் கிட்ட சண்டை போட்டு இருக்கலாம்… மக்களை முட்டாள் என்று நினைக்கிறார்களா? கனிமொழி முன்னாள் முதல்வர் திமுகவின் தலைவர் கருணாநிதியின் பெண் ஆனால் கனிமொழியை ஏதோ ஒரு ஜாதி தலைவர் மாதிரி தூத்துக்குடிக்கு மட்டுமே சுருக்கி வைத்திருக்கின்றார்கள்.. ஆட்சியிலும், கட்சியிலும் சென்னையில் இருக்க கூடாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்.. அப்போதுதான் ஒண்ணுமே தெரியாத உதயநிதிக்கு பட்டம் கட்ட முடியும்.. யோசித்துப் பாருங்கள் திமுக கட்சியின் தலைமை பதவிக்கு கருணாநிதி குடும்பத்தை தான் நம்பி இருப்பார்கள் அந்த அப்பாவி தொண்டர்கள்.. கருணாநிதிக்கு பின் கருணாநிதி பையன் ஸ்டாலின் தலைவர், சரி ஒத்துக்கலாம் அவருக்கு அப்புறம் கருணாநிதி மடியில் வளர்ந்த கனிமொழி தானே வர வேண்டும்…கனிமொழி கனிமொழிக்காகவாவது கூட கேள்வி கேட்பதில்லை… இதிலேயே உரிமையை கேட்காதவர்கள் மக்கள் உரிமையை கேட்பார்களா?.. சுயநலத்திற்காக சொந்த லாபத்திற்காக எம்பியாக வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர தூத்துக்குடி மக்கள் மேல் பாசம் வைக்கவில்லை….ஆகவே தயவு செய்து இவர்களை நம்ப வேண்டாம்..
(உள்ளூரில் ஓந்தான் புடிக்க முடியாத இவர் வெளியூரில் போய் டைனோசரை பிடிக்க போகிறரராமா). தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.. முதலில் ஒழுங்கா காரில் ஏறி உட்கார கற்றுக்கொள்ளலாமே.. பின்னர் டெல்லி போவதை பேசலாம்.. இவர் டெல்லி போய் என்ன பண்ணப் போகின்றார்.. 5 வருடத்திற்கு முன்னர் செங்களை கொண்டு வந்தார் உதயநிதி, ஐந்து வருடம் முடிந்தும் இந்த தேர்தலிலும் வெட்கமில்லாமல் அதே செங்களோடு வருகின்றார்.. அதைப் பற்றி பேசாமல் அதிமுக கும்பிடு போட்டார்கள்.. காலில் விழுந்தார்கள். முட்டி போட்டார்கள் என்று ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கின்றார்… உதயநிதியின் ஆபாச பேச்சு பேசினதுக்கு அப்புறம் இரண்டு நாட்களில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் என்னவென்று தெரியுமா? சேகர் பாபு, உதயநிதி அம்மா துர்கா ஸ்டாலின் காலில் விழுகிறது தான் அந்த வீடியோ, பார்த்து. பேசுங்கள் கொச்சைப்படுத்தி எங்களுக்கும் பேச வரும்.. ஆனால் நாங்கள் பேச மாட்டோம்..காரணம், நாங்கள் அதிமுககாரர்கள் அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியும் …
உதயநிதி போட்டோ தூக்கிட்டு வருகின்றார்… உதயநிதிக்கு திமுக வரலாறு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.. உங்கள் தாத்தாவின் வரலாறு தெரியுமா? இலங்கை தமிழர்கள் மீனவர்கள் சாகும்போது கவலைப்படாத உங்க தாத்தா, வாய் திறக்காத உங்க தாத்தா, டெல்லிக்கு ஓடி போய் முட்டி போட்டு பாவ மன்னிப்பு கேட்டார்.. இந்த கதை உதயநிதிக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை.. அவர் ஒரு போட்டோ தூக்கிட்டு வராரு.. ஆனால் நாங்கள் அவர் வரலாற்றை பேசுவது என்றால் ஆல்பம் தான் தூக்கி கொண்டு வரவேண்டும்.. நாய் கண்ட, கண்ட இடத்தில் வாய் வைக்கும்.. பார்த்து பேசுங்க தம்பி, நாம் மனிதர்கள், மரியாதை ரொம்ப முக்கியம்.. வார்த்தை ரொம்ப முக்கியம்.. இல்லை என்றால் ரொம்ப வருத்தப்படுவோம்.. தேர்தல் சமயத்தில் அள்ளி வாக்குறுதி கொடுப்பார்கள். எத்தனையோ வாக்குறுதிகள் கொடுப்பார்கள்.. தேர்தல் முடிந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றுகிறார்களா? மக்களுக்கு ஏதேனும் செய்கிறார்களா? இப்போது எந்த தேர்தலில் மறுபடியும் மக்களை முட்டாளாக்க வேண்டும் என்று கொண்டு வந்திருக்கின்றார்? திமுக சொல்கிறது இந்த தேர்தலில் திமுக ஜெயித்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் தருகிறார்களாம்.. 75 ரூபாய்க்கு பெட்ரோல், 65 ரூபாய்க்கு டீசல் தருகிறார்களாம்.. தெரியாமல் தான் கேட்கிறேன் எப்படி தருவார்கள் அப்படியே திமுக காரன் கொடுத்தாலும் 500 ரூபாய் டீசல் வரும் ஆனால் உள்ள கேஸ் கிடைக்காது.. 75 ரூபாய்க்கு பெட்ரோல் தருவார்கள் ஆனால் அரை லிட்டர் தான் என்பார்கள்.. டீசல் டிரைவருக்கு தான் என்பார்கள். அதுவும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு தான் என்பார்கள்.. தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்… தேர்தல் வருவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள் நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கின்றோம்.. மத்திய அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவில்லை.. நாங்கள் கேட்ட பணம் கொடுக்கவில்லை என்று மத்திய அரசாங்கம் மேல் பழியை போடுகின்றார்கள்.. நாங்கள் காசு கேட்டால் கொடுக்க வேண்டியது தானே அது அவன் அப்பன் வீட்டு காசா என்று உதயநிதி கேட்கின்றார்.. நீங்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.. 1 ரூபாய் வரி பணம் கட்டினால் 50 பைசா மத்திய அரசாங்கத்திற்கு போகின்றது.. 50 பைசா மாநில அரசாங்கத்திற்கு போகின்றது.. நம் கட்டிய இந்த வரி பணம் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரலாம்.. மக்களுக்கு நல்லது செய்யலாம்.. ஏன் திமுக அதை செய்யவில்லை… அது என்ன அவர்கள் அப்பன் வீட்டுக்காசா? புயல் வந்தாலும், பிரச்சனை வந்தாலும் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் உடனே நாங்கள் எல்லாம் நிவாரணம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் தருவோம் என்று சொல்லிவிடுவார்கள்.. பிரச்சனை முடிந்ததற்கு அப்புறம் ரேஷன் கடையில் போய் நின்னால் வருமான வரி கட்டினால் கிடையாது என்று பாதி பேரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்… அடுத்தவன் பொண்டாட்டிக்கு தகுதி இருக்கா, இல்லையா என்று சொல்ல ஸ்டாலின் யார்.. எல்லா பெண்களுக்கும் கொடுக்க வேண்டியதுதானே அது அப்பன் வீட்டு காசா.. வெள்ளத்தில் சேதம் அடைந்த பள்ளிக்கூடத்தை சரி செய்வதற்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி விட்டு, கார் ரேஸ்-க்கு 40 கோடி நிதி ஒதுக்கீடு என்றால் அது அவன் அப்பன் வீட்டு காசா? ராணுவத்தில் இறந்தவனுக்கு 3 லட்சம் கள்ளச்சாராயத்தில் இறந்தவனுக்கு 10 லட்சம் தருகின்றான் அது அவன் அப்ப வீட்டுக்காசா? நீட்டை ஒரே கையெழுத்தில் ஒளிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாமல் மக்களை ஏமாற்றி, 50 லட்சம் கையெழுத்து வாங்கினார்களே அரசாங்க பணத்தில் அது உதயநிதி அப்பா வீட்டுக்காசா? இப்போது கண்ணா பின்னா வென்று கரண்ட் பில் ஏற்றி விட்டார்கள்… மக்கள் அவஸ்தைப்படக்கூடாது என்று கரண்ட் பில் குறைக்கலாம்… அதுமட்டுமல்ல, பால் விலையை ஏற்றி விட்டார்கள்… கேட்டால் இந்த பால் குடிக்காதீர்கள் என்று சொல்கின்றார்கள்… எந்த பால் குடிக்கணும், குடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு திமுக காரன் யார்? எல்லா தரப்பு மக்களும் கஷ்டப்படுகின்றார்கள். மக்களுக்காக, கொஞ்சமாவது நல்லது செய்யலாம் அல்லவா,
திருடனை கூட நம்பிவிடலாம்.. ஆனால் திமுக காரனை நம்பக்கூடாது.. திமுகவிற்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோர்ட் போடுவதும் ஒன்றுதான் என்றார்….