Thupparithal
அரசியல்

திமுக MP கனிமொழி ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று கலைஞர் சமாதியில் சத்தியம் செய்யட்டும்.. தூத்துக்குடி தொகுதியில் டெபாசீட் வாங்க மாட்டார் என்றும், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி களத்தில் நின்றதால் திமுக எளிதாக வெற்றி பெற்றதாகவும் -அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி காரசாரமாக பேசியுள்ளார்..!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆர். சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.. இவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலையூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி, மற்றும் கூட்டணி கட்சியினருடன் திறந்த வெளி வாகனத்தில் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்..

அப்போது வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி கூறும் போது, சென்ற இடங்களிலெல்லாம் எங்களை (அதிமுக) மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.. கனிமொழி எங்கள் பகுதிக்கு இதுவரை வரவும் இல்லை, பார்த்ததுமில்லை, நாங்கள் சந்திக்க சென்றாலும் கூட அவரை சந்திக்க முடியவில்லை என்று பொது மக்கள் குற்றசாட்டை முன் வைக்கின்றனர்.. கனிமொழியின் சொத்து மதிப்பு தேர்தல் கணக்கில் ஐந்து ஆண்டுகளில் வருமானம் 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.. கனிமொழியின் கணவர், மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள், இந்தியர்கள் அல்ல..

கனிமொழிக்கும் தூத்துக்குடி தொகுதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவருடைய ஒரே தகுதி தமிழக முதல்வர் தங்கை என்ற தைரியம் தான், தேர்தல் பறக்கும் படை சோதனையில் அவர்களே சொல்லி வைத்து கொண்டு, கேமரா தயார் செய்து வைத்து கொண்டு திட்டமிட்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான வாகன சோதனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

செந்தில் பாலாஜி கொள்ளையடித்த பணம், ஊழலில் சம்பாதித்த பணம், கஞ்சா போதை பொருட்கள் உள்ளவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அதில் வந்த பணம் என அனைத்தும் திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். பணத்தை நம்பியே இருக்கிறார்களே தவிர இவர்களுக்கு மக்களிடம் எந்த செல்வாக்கும் இல்லை. ஆனால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களது வெற்றி மேலும், மேலும் உறுதி செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது. கனிமொழி இந்த மழை வெள்ளத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. மழை முடிந்து நான்கு நாட்கள் கழித்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் அவ்வளவு தான்..

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி களத்தில் நின்றதால் திமுக எளிதாக வெற்றி பெற்றது. இந்த பாராளுமன்ற தொகுதியில் எம்ஜிஆர் கண்ட சின்னம், அம்மாவின் சின்னம், எடப்பாடியாரின் சின்னம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். அவர்கள் டெபாசீட் வாங்குவது உறுதி, உண்மையிலேயே கலைஞர் மக்கள் பணி செய்திருந்தால், மு. க .ஸ்டாலின் மக்கள் பணி செய்திருந்தால், கனிமொழி மக்கள் பணி செய்திருந்தால், கலைஞர் சமாதியில் பணம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்துவிட்டு தூத்துக்குடியில் வேலை செய்யட்டும். பணம் செலவு செய்யாமல், மக்களுக்கு பணம் கொடுக்காமல் தூத்துக்குடியில் டெபாசீட் வாங்கினால் பெரிய அதிசயம் தான் என்று கடுமையாக சாடினார்..

Related posts

திமுகவை கண்டித்து தூத்துக்குடி மாநகர் 22வது வார்டு பகுதியில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Admin

“கலைஞர் நூற்றாண்டு விழா” கோவில்பட்டியில் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டையை வாங்கி கொடுத்த நகர மன்ற உறுப்பினர்..!

Admin

தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க கூடியவர் முதல்வர் ஸ்டாலின்-மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!